லக்னோ-உத்தர பிரதேச மாநிலத்தில் ரவுடிகள் மற்றும் 'மாபியா'க்களின் 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை போலீஸ் முடக்கியது.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இது குறித்து உ.பி., மாநில டி.ஜி.பி., பிரசாந்த் குமார் கூறியதாவது:கடந்த 2017 ஏப்., மாதம் முதல், இந்தாண்டு ஜூலை வரை சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 43,294 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 630 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரவுடிகள் மற்றும் மாபியாக்களின் பின்னணியை உடைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் முறைகேடாக சேர்த்திருந்த 1,848 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஜாதியினர் கைது செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE