பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: என்னென்ன நடக்குமோ தி.மு.க., ஆட்சியிலே!

Updated : ஆக 07, 2021 | Added : ஆக 07, 2021 | கருத்துகள் (130)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய 'இ - மெயில்' கடிதம்:'பாதிரியாரையும், கன்னியாஸ்திரியையும் 'ஹீரோ, ஹீரோயின்'களாக பார்க்க வேண்டும். உலகில் எந்த மூலையில் எவனாக இருந்தாலும், பாதிரியாரையும், கன்னியாஸ்திரியையும் கைது செய்ய, போப்பிடம் அனுமதி பெற வேண்டும் என சட்டம் இயற்ற


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :

என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய 'இ - மெயில்' கடிதம்:

'பாதிரியாரையும், கன்னியாஸ்திரியையும் 'ஹீரோ, ஹீரோயின்'களாக பார்க்க வேண்டும். உலகில் எந்த மூலையில் எவனாக இருந்தாலும், பாதிரியாரையும், கன்னியாஸ்திரியையும் கைது செய்ய, போப்பிடம் அனுமதி பெற வேண்டும் என சட்டம் இயற்ற வேண்டும்' என, மாதர் குல மாணிக்கம் ஒருவர் கூறியுள்ளார்.அவர் வேறு யாரும் அல்ல; கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகளும், தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில்குமாரின் மனைவியுமான மெர்சி தான்.



latest tamil news


மாமனார், கணவர் எல்லாம் தி.மு.க., ஆட்சியில் முக்கிய பிரமுகர்களாக இருக்கும்போது, 'எடுத்தோம்; கவிழ்த்தோம்' என அவர் பேசியிருக்க வாய்ப்பு இல்லை. அவர், அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.ஹிந்து, பாரத மாதா, பிரதமர் மோடி குறித்து தரம் தாழ்த்தி விமர்சனம் செய்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்ய உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.'எவனாக இருந்தாலும்...' என அவர் பேசியது, யாரை குறித்து என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும்.இதுபற்றி தி.மு.க., அமைச்சர் ஐ.பெரியசாமி என்ன நினைக்கிறாரோ... மருமகளின் கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பாரோ?


latest tamil news


'பாதிரியார், கன்னியாஸ்திரி எல்லாம் கடவுளின் பிரதிநிதிகள். அவர்கள் யாரை பற்றியும், எவ்வளவு கேவலமாகவும் விமர்சனம் செய்யும் உரிமை பெற்றவர்கள். யாரையும் துாக்கிப் போட்டு பந்தாட்டம் ஆட சகல உரிமைகளும் அவர்களுக்கு உள்ளது.'பாதிரியார், கன்னியாஸ்திரிகள் குற்றச் செயலில் ஈடுபட்டால், அதை யாரும் தடுக்க கூடாது; வேடிக்கை பார்க்க வேண்டும்' என, அந்த அம்மணி கூறுகிறார் போலும்.எத்தனையோ பாதிரியார்கள், கற்பழிப்பு வழக்கில் சிக்கி இருக்கின்றனரே... அவர்கள் பாதிரியார் என்பதால், நீதிமன்றம் தண்டிக்காமல் விட்டுவிட்டதா என்ன?தி.மு.க., அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகள் மெர்சியே சொல்லிவிட்டார் என்பதால், நீதிமன்றம் கீழ்த்தரமாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை விடுதலை செய்து விடுமா என்ன?இன்னும் என்னென்ன நடக்குமோ தி.மு.க., ஆட்சியில்... தெரியவில்லை!

Advertisement




வாசகர் கருத்து (130)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - Bandar Seri Begawan,புருனே
14-ஆக-202102:16:30 IST Report Abuse
Murugan இது இவரின் தனிப்பட்ட கருத்து போல் தெரியவில்லை. நிச்சயம் தி.மு.க. வின் குரல் தான்.
Rate this:
Cancel
Prakash - Chennai,இந்தியா
09-ஆக-202113:23:12 IST Report Abuse
Prakash அடுத்தமுறை இந்தம்மாவிற்கு MLA பதவி CONFIRMED... MINORITY மக்களுக்காக பேசுகிறார் ...இதிலும் இந்தம்மா MINORITY வேறு...சமூக நீதியை தீ மு க நிலை நாட்டிக்கொண்டேயிருக்க இதை விட ஒரு சிறந்த "QUALIFICATION" இருக்க முடியாது.
Rate this:
Cancel
NARAYANAN.V - coimbatore,இந்தியா
09-ஆக-202112:43:26 IST Report Abuse
NARAYANAN.V பாடம் புகட்டவேண்டியது களை வாரிசுதான். அமைக்கப்போகும் மேல் சபையில் மணப்பாறை மணல் மாபியா ஆரோக்கியசாமி,இந்த மெர்ஸி அம்மணிக்கெல்லாம் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டாலும் ஆச்சர்யப்பட ஏதும் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X