பொது செய்தி

இந்தியா

வரும் 12ல் டில்லியில் காவிரி குழு கூட்டம்

Updated : ஆக 07, 2021 | Added : ஆக 07, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை-காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம், வரும், 12ம் தேதி, டில்லியில் நடக்கவுள்ளது.தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவையும், காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது.ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான நீரை, கர்நாடக அரசு வழங்கவில்லை. இதனால், ஆகஸ்ட் 4 வரை, காவிரி நீர்

சென்னை-காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம், வரும், 12ம் தேதி, டில்லியில் நடக்கவுள்ளது.



latest tamil news


தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவையும், காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது.ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான நீரை, கர்நாடக அரசு வழங்கவில்லை. இதனால், ஆகஸ்ட் 4 வரை, காவிரி நீர் நிலுவை 8.11 டி.எம்.சி.,யாக உள்ளது.

இந்நிலையில், காவிரியில் மேகதாது என்ற இடத்தில், 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அணை கட்டுவதற்கான முயற்சியில் கர்நாடக அரசு இறங்கியுள்ளது.இந்த அணை கட்டப்பட்டால், மழைக் காலங்களில் கிடைக்கும் காவிரி நீரும் தமிழகத்திற்கு வருவதற்கு வாய்ப்பில்லை. இந்நிலையில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம், 12ம் தேதி டில்லியில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடக்கவுள்ளது.


latest tamil news


இதில், தமிழகத்திற்கு உரிய நீரை திறக்க வலியுறுத்தப்பட உள்ளது. மேகதாது அணை குறித்து விவாதம் நடத்த, கர்நாடக அரசு முயற்சிக்க வாய்ப்புள்ளது. இதை தடுப்பதற்கான முயற்சியில், தமிழக அதிகாரிகள் கவனம் செலுத்த உள்ளனர். மிகவும் பரபரப்பாக சூழ்நிலையில், இந்த கூட்டம் நடக்கவுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
07-ஆக-202108:08:13 IST Report Abuse
duruvasar விடியல் அரசு காவிரி நதிநீர் ஆணையத்தின் மீது விடிய விடிய கொடுத்த அழுத்தத்தினால் கூட்டம் கூட்ட ஒத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
07-ஆக-202107:49:00 IST Report Abuse
VENKATASUBRAMANIAN என்ன செய்தாலும் திமுகவினர் முட்டு கட்டை போடுவார்கள். இது தீர்வு காணப்படக்கூடாது என்பதில் 50ஆண்டுகளாக தீவிரமாக உள்ளனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X