தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தலுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் தயாராகிறது! 9 ஒன்றியங்களில் 1,889 ஓட்டுச்சாவடி மையங்கள்

Added : ஆக 07, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : உள்ளாட்சித் தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,889 ஓட்டுச்சாவடி மையங்கள் தயார் செய்யப்பட்டு, பட்டியல் வெளியிடப்பட்டது.தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறு வரையறை செய்யப்படாததால் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலுார், ராணிப்பேட்டை உட்பட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.இந்நிலையில் வரும் செப்டம்பர் 15ம்

கள்ளக்குறிச்சி : உள்ளாட்சித் தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,889 ஓட்டுச்சாவடி மையங்கள் தயார் செய்யப்பட்டு, பட்டியல் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறு வரையறை செய்யப்படாததால் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலுார், ராணிப்பேட்டை உட்பட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.இந்நிலையில் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடக்கிறது.

ஊரக பகுதிகளில் 19 மாவட்ட கவுன்சிலர்கள், 180 ஒன்றிய கவுன்சிலர்கள், 3,162 கிராம வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.முதல் கட்டமாக, அனைத்து கிராமங்களிலும் ஓட்டுச் சாவடி மையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கியது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஒரு ஓட்டுச்சாவடி மையத்தில் 1000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருக்கக் கூடாது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருந்தால் அங்கு கூடுதலாக துணை ஓட்டுச்சாவடி மையம் அமைக்க வேண்டும்.

மையத்தில் குடிநீர், கழிவறை, மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் ஓட்டளிக்க வசதியாக சாய்தளம் இருக்க வேண்டும். வாக்காளர்களின் இருப்பிடத்திலிருந்து ஒன்றரை கி.மீ., தொலைவிற்குள் ஓட்டுச்சாவடி மையம் இருக்க வேண்டும் உட்பட பல்வேறு விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டது.இதையொட்டி பி.டி.ஓ.,க்கள் தங்களது ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பஞ்சாயத்திற்கும் சென்று, அங்குள்ள அரசு பள்ளி கட்டடம் மற்றும் கிராம சேவை மைய கட்டடம், அங்கன்வாடி, சமுதாய கூடம் போன்ற கட்டடங்கள் தேர்வு செய்துள்ளனர்.

மாவட்டத்தில் 1,889 ஓட்டுச்சாவடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான முழு விபர பட்டியல் பி.டி.ஓ., அலுவலகத்திலும், ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் ஒட்டப்பட்டுள்ளது.தேர்வு செய்யப்பட்டுள்ள மையங்களில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக வருவாய்த் துறையில் இருந்து வாக்காளர்கள் பட்டியலை வாங்கி, அதில் பஞ்சாயத்து வார்டு வாரியாக வாக்காளர்களை பிரிக்கும் பணி நடக்கிறது.

ஓட்டுச்சாவடி மையங்கள் விபரம்

ஒன்றியங்கள் பஞ்சாயத்து வார்டுஉறுப்பினர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் மாவட்ட கவுன்சிலர்கள் வாக்குச்சாவடிமையம்கள்ளக்குறிச்சி 46 375 23 2 249சின்னசேலம் 50 384 21 2 218சங்கராபுரம் 44 363 24 2 221கல்வராயன்மலை 15 135 7 1 91தியாகதுருகம் 40 297 16 2 171ரிஷிவந்தியம் 60 444 25 3 258திருக்கோவிலுார் 60 432 23 2 238உளுந்துார்பேட்டை 53 402 21 3 235திருநாவலுார் 44 330 20 2 208மொத்தம் 412 3,162 180 19 1,889

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X