சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு ஏ.வ.வேலு , உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட எம்.பி.க்கள் மற்றும் தி.மு.க.வினரும் சென்றனர்.

இது போல் கோபாலபுரம், சிஐடி காலனி இல்லத்திற்கும் சென்ற ஸ்டாலின் அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுக தொண்டர்கள் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சிறந்த அஞ்சலி
ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நூற்றாண்டு காணப்போரும் கருணாநிதி புகழ் ஆயிரம் ஆண்டு நிலைத்திருக்க பணியாற்றுவோம். கருணாநிதி சிந்தனையை நிறைவேற்றுவதை விட அவருக்கு சிறந்த அஞ்சலி இருக்க முடியாது. தமிழை, தமிழர்களை, தமிழகத்தை திராவிட இயக்க சிந்தனை அடிப்படையில் வளர்த்தெடுக்க உறுதி ஏற்போம் எனக்கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE