சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டைய கெளப்புது பட்டா வசூல்: வருவாய்த்துறையில் வகைதொகையில்லா லஞ்சம்

Updated : ஆக 07, 2021 | Added : ஆக 07, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
கோவை மாவட்டத்தில், வருவாய்த்துறையில் வாரிசு சான்று, பட்டா பெயர் மாறுதல் போன்றவற்றுக்கு, அதீதமாக லஞ்சம் வாங்கப்படுவதால், பொதுமக்களிடம் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.தமிழகத்தில் முக்கிய அரசுத்துறை பணிகள் அனைத்தும் மின் ஆளுமையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால், பிறப்பு, இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பட்டா பெயர் மாற்றம் என மக்களுக்குத் தேவையான பலவித
கோவை, பட்டா வசூல், வருவாய்த்துறை, வகைதொகை, லஞ்சம்

கோவை மாவட்டத்தில், வருவாய்த்துறையில் வாரிசு சான்று, பட்டா பெயர் மாறுதல் போன்றவற்றுக்கு, அதீதமாக லஞ்சம் வாங்கப்படுவதால், பொதுமக்களிடம் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.

தமிழகத்தில் முக்கிய அரசுத்துறை பணிகள் அனைத்தும் மின் ஆளுமையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால், பிறப்பு, இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பட்டா பெயர் மாற்றம் என மக்களுக்குத் தேவையான பலவித சேவைகளும், 'ஆன்லைன்' முறையில் வழங்கப்படுகின்றன. ஆனால் 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பித்தாலும், அதிகாரிகளின் தயவின்றி அல்லது லஞ்சம் கொடுக்காமல், எந்தச் சான்றும் கிடைக்காது என்கிற அளவிற்கு, மாவட்டத்தில் லஞ்சம் தலை விரித்தாடுகிறது.


latest tamil news


அதிலும் குறிப்பாக, வருவாய்த்துறையில் கடந்த சில ஆண்டுகளாக, லஞ்சத்தின் அளவு படிப்படியாக உயர்ந்து, தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.வாரிசு சான்றுகளுக்கு உரிய ஆதாரங்கள் அனைத்துடனும், 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பித்தாலும், காரணமேயின்றி அவை நிராகரிக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது. இதற்கான காரணத்தை அறிய, சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்துக்கு மக்கள் அலைய வேண்டியுள்ளது. லஞ்சம் கொடுக்காமல் வாரிசு சான்று வாங்குவது, குதிரைக் கொம்பாகவுள்ளது.

இதேபோன்று, பட்டா பெயர் மாறுதலுக்கு, நில மதிப்பைப் பொறுத்து லஞ்சம் கேட்கப்படுகிறது. விவசாய நிலமாக இருந்தால், ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய் வீதமும், மனையிடமாக இருந்தால், அங்குள்ள சந்தை மதிப்பைப் பொறுத்தும், சென்ட்டுக்கு இவ்வளவு என்றும் வருவாய்த்துறையினர் லஞ்சம் கேட்கின்றனர்.கேட்கும் தொகையைத் தர மறுத்தால் அல்லது குறைத்துக் கொடுத்தால், அரைகுறையாக வேலையை முடித்துத் தருகின்றனர். இல்லாவிடில், உயரதிகாரிகளுக்கு தவறான தகவல் கொடுத்து, பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியாமல், மக்களை அலைய விடுகின்றனர்.

கிராம நிர்வாக அலுவலர்கள் சிலர், லஞ்ச ஒழிப்புத்துறை பற்றி சிறிதும் அச்சமின்றி, லஞ்சம் கேட்கின்றனர். தாசில்தார், துணை தாசில்தார் போன்றவர்கள், ஆள் பார்த்து லஞ்சம் வாங்குகின்றனர். சிலர், கொடிநாள் வசூல் என்று பல்லாயிரக்கணக்கில் பணம் கேட்கின்றனர். அதில் பாதியை மட்டும் கணக்கில் காண்பிக்கின்றனர்.

கடந்த பத்தாண்டுகளாக, அ.தி.மு.க., ஆட்சியில், அப்போதிருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவாளர்கள், உறவினர்கள் போன்றோர்தான், வருவாய்த்துறையில் இப்போதும் முக்கியப் பதவிகளில் உள்ளனர். இவர்கள்தான் கடந்த ஆட்சிக்காலத்தில், பலவித முறைகேடுகளுக்கும் காரணமாகவும் இருந்துள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறையும் இவர்களை கண்டுகொள்ளவேயில்லை. லஞ்சம் கொடுப்பதற்குப் பதிலாக, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் கொடுக்க, மக்களும் முன் வருவது அவசியம்!


'நடவடிக்கை எடுக்கப்படும்'


கோவை கலெக்டர் சமீரனிடம் கேட்டதற்கு, ''பட்டா பெயர் மாறுதல், வாரிசு சான்று போன்றவற்றுக்கு, யார் லஞ்சம் கேட்டார்கள் என்று நேரடியாக என்னிடம் புகார் அளிக்கலாம். ஆதாரமிருந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். வருவாய்த்துறை அலுவலர்கள், தேவையின்றி மக்களை அலைக்கழிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய புகார்களின் மீது, கடும் நடவடிக்கை எடுப்பதற்கு, லஞ்ச ஒழிப்புத்துறையிடமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
-நமது நிருபர்-

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஆக-202123:34:25 IST Report Abuse
அப்புசாமி லஞ்சம் வாங்கி பிடிபட்டவனை தயவு தாட்சண்யம் இல்லாம பதவி நீக்கம் செய்து, சிறையிலும் அடைக்க வேண்டும். ஆனா இங்கே பணியிடை நீக்கம் செய்து மேலும் ஆட்டையப் போடக்கூடிய இடத்துக்கு மாத்திருவாங்க. அப்பத்தானே மேலதிகாரிகளுக்கும் பங்கு போகும்?
Rate this:
Cancel
Sundara Raman - bengaluru,இந்தியா
07-ஆக-202121:37:33 IST Report Abuse
Sundara Raman லஞ்சத்தின் ஊற்றுக்கண் தமிழ்நாடு. திராவிட கட்சிகளின் ஆணிவேர் லஞ்சம் தான். லஞ்சமில்லையேல் தமிழன் இல்லை............
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
07-ஆக-202121:33:23 IST Report Abuse
m.viswanathan லஞ்சம் வாங்கும் அரசு ஊழியரை அடையாளம் கண்டு , மாலை பணி முடிந்து வீடு திரும்போது , ஒரு நாலு பேர் , follow செய்து , எங்கேனும் , ஒரு இருட்டு முட்டு சந்தில் வைத்து , ஆசை தீர அடித்து அனுப்ப வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X