பொது செய்தி

தமிழ்நாடு

கணினிமயமாக்கல் குளறுபடி: பட்டாக்களில் பிழைகள் ஏராளம்

Added : ஆக 07, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை: கணினிமயமாக்கல் பணியில் ஏற்பட்ட கவனக்குறைவு காரணமாக, 60 சதவீத பட்டாக்கள் பிழைகளுடன் இருப்பதால், வருவாய் துறை மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் 1992ல், நில ஆவணங்களை கணினிமயமாக்கும் பணிகள் துவங்கின. 2 ஆயிரத்துக்கு பின், பெரும்பாலான மாவட்டங்களில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதில், 'மேனுவல்' முறையில் வழங்கப்பட்ட பட்டா பதிவேடுகளை, ஒப்பந்த
பட்டா, கணினிமயமாக்கல், தவறு, குளறுபடி

சென்னை: கணினிமயமாக்கல் பணியில் ஏற்பட்ட கவனக்குறைவு காரணமாக, 60 சதவீத பட்டாக்கள் பிழைகளுடன் இருப்பதால், வருவாய் துறை மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 1992ல், நில ஆவணங்களை கணினிமயமாக்கும் பணிகள் துவங்கின. 2 ஆயிரத்துக்கு பின், பெரும்பாலான மாவட்டங்களில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதில், 'மேனுவல்' முறையில் வழங்கப்பட்ட பட்டா பதிவேடுகளை, ஒப்பந்த பணியாளர்களை பயன்படுத்தி, கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.இந்த பணிகளில் அலட்சியமாக செயல்பட்டதால், கணினியில் உள்ள ஆவணங்கள் பிழையாக உள்ளன.

உதாரணமாக, ஒரு சொத்தின் பட்டாவில், 'ராமசாமியின் மகன் ரங்கசாமி' என்று, 'மேனுவல்' பட்டாவில் உள்ளது. இது கணினியில், ரங்கசாமி மகன் ராமசாமி என்று, குறிப்பிடப்பட்டுள்ளது. பெயர்கள் மட்டுமல்லாது, நில அளவுகளும் தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. இந்த கணினி ஆவணங்கள் அடிப்படையில், புதிய கட்டட அனுமதி, வங்கிக் கடன் பெற முடியாத நிலை ஏற்படுகிறது.


latest tamil news
இது குறித்து, ஓய்வுபெற்ற நில அளவை துறை அதிகாரி கீதாகுமாரி கூறியதாவது:பட்டா உள்ளிட்ட ஆவணங்களை, கணினியில் பதிவேற்றும் பணியில், பெரிய அளவில் குளறுபடிகள் நடந்துள்ளன. இதை சரி செய்ய, வட்டாட்சியர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.பட்டா விபரங்களை பதிவேற்றும் பணிகளை கண்காணிக்க, வருவாய் துறை அதிகாரிகளை பொறுப்பாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஆக-202123:30:59 IST Report Abuse
அப்புசாமி இதெல்லாம் வேணும்னுட்டே செய்யறது. தவறாக தகவல் பதிவேற்றம் செய்துடறது. பிறகு எப்பிடியும் திருத்தத்திற்கு வருவாங்க. அப்போ கைச்செலவுக்கு காசு தேத்தறது. தவறா பதிவேத்துனவங்கள்ள ஒரு 10 பேரை வீட்டுக்கு அனுப்புங்க. மத்தவன் கதறிக்கிட்டு வேலை செய்வான்.
Rate this:
Cancel
sundara - tirunelveli,இந்தியா
07-ஆக-202122:07:32 IST Report Abuse
sundara Still now no computerised patta for Naththam. Plus TSLR survey no differ from Real patta no. There is no web site it shows registration office survey no in TSLR . Without knowing that survey no use of on line TSLR certificate. Every dept using different survey no. need to bring out that truth also.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
07-ஆக-202120:40:15 IST Report Abuse
RajanRajan மொத்தத்தில் அந்த கோபாலபுரத்து வருவாய் துறை ஊழியர் சங்கம் பட்டா கணினி மயமாவதை விரும்பவில்லை. அதனால் குளறுபடிகள் எனும் வித்தை அரங்கேறுகிறது. சும்மாவா லஞ்சம் கொட்டுற இடத்துலே போயி கார்க் வச்சு அடிச்சா வுட்டுருவானுங்களா அந்த நமக்கு நாமே விடியல் தேசம் அரசு ஊழியர்கள். நல்ல வுட்டு ஆட்டுறங்கப்பா பணம் கொட்டுற வரைக்கும். அப்போ அந்த திரவிட புகார் பொட்டி. ஹூம் அதுலேயும் லஞ்ச பங்களிப்பை புகாருடன் சேர்த்து போட்டுக்கோ. ஜெய் தயிர் வடை, ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X