50% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி அமெரிக்கா சாதனை

Updated : ஆக 07, 2021 | Added : ஆக 07, 2021 | கருத்துகள் (7) | |
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் இரண்டு தவணை கோவிட் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளதாக என அமெரிக்க தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெள்ளை மாளிகையின் கோவிட் தரவுகள் இயக்குநர் சைரஸ் ஷாபார் தெரிவித்து உள்ளதாவது:வயது வந்தோரில் 50 சதவீத அமெரிக்கர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்கு, கடந்த மே மாதம் எட்டப்பட்டது. அமெரிக்க அதிபராக ஜோ

வாஷிங்டன்: அமெரிக்க மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் இரண்டு தவணை கோவிட் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளதாக என அமெரிக்க தெரிவித்துள்ளது.latest tamil news
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் கோவிட் தரவுகள் இயக்குநர் சைரஸ் ஷாபார் தெரிவித்து உள்ளதாவது:வயது வந்தோரில் 50 சதவீத அமெரிக்கர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்கு, கடந்த மே மாதம் எட்டப்பட்டது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதிலிருந்து தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இருப்பினும், பழமைவாதிகள் அதிகம் வாழும் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தடுப்பூசி விநியோகம் ஏப்ரல் மாதம் சுணக்கம் கண்டது.


latest tamil newsஇருந்தும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது 50 சதவீத அமெரிக்கர்கள் முழுவதுமாக தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதை நாம் தொடர வேண்டும். இரண்டு தவணை மாடர்னா அல்லது பைசர் தடுப்பூசிகள் அல்லது ஒரு தவணை ஜான்சன் அன்ட் ஜான்சன் தடுப்பூசிகளை 16.5 கோடி அமெரிக்கர்கள் செலுத்தியிருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தினால், விரைவில் இயல்பு வாழ்க்கை திரும்பும் என, அமெரிக்க அரசு எதிர்பார்த்தது. ஆனால், அங்கு டெல்டா வகை வைரஸ் தீவிரமாக பரவி அரசின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
08-ஆக-202108:07:54 IST Report Abuse
Viswam வல்லரசு நாடு, முப்பத்திமூணு கோடி ஜனத்தொகை, பைசர், மாடெர்னா வாக்சின் கைவசம் ஸ்டாக், அப்படி இருந்தும் அமெரிக்காவிலே ஐம்பது சதவீதம்தான். ஜோ பைடன் பிரம்மபிரயத்தனம் செஞ்சும் எல்லா ஆணியும் புடுங்கமுடியலை. நம்ம ஊரு ஜனத்தொகை எவ்வளவு, வேக்சின் கையிருப்பு எவ்வளவு, பைசர், மாடெர்னா, ஜான்சன் கம்பெனியெல்லாம் போட்ட கண்டிஷன் எவ்வளவு, அப்படி இருந்தும் மத்திய அரசு இந்திய மக்கள் அவ்வளவு பேருக்கு கோவிஷீல்டு /கோவேக்சின் போட்டு, அதை கண்காணிக்க கோவின் மற்றும் ஆரோக்கியசேது வழியாக ஆவண செய்தும், உபீசும், இடது சாரி போக்கத்தவனும், டிவிட்டர் சூரன்களும், ஐரோப்பிய அமெரிக்க அல்லுலேயே பத்திரிகைகளும் என்ன என்ன சொல்லறான் பாருங்க ? இங்கே மீம்ஸ் போட்டு, ட்வீட் போட்டு அரசை கிண்டலடித்தவன் எல்லாம் சத்தம் போடாமல் ஊசி சொருகிட்டவன்தான். அவனுங்கதான் கட்டுரை எழுதி நியூயார்க் டைம்ஸுலேயும், இங்கிலாந்தை சேர்ந்த கார்டியன் மற்றும் பிபிசி எல்லாத்துக்கும் வித்தபயலுக. என்ன என்ன எழுதறான் பாருங்க ?
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
07-ஆக-202121:53:37 IST Report Abuse
Balaji 70 % மக்களுக்கு ஒரு டோஸ் போட்டாகிவிட்டதாமே? அப்புறம் ஏன் கொரோனா குறையவில்லை? மாறாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது?
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
07-ஆக-202120:04:26 IST Report Abuse
Ramesh Sargam இந்தியா அதற்கும் அதிகமாக தடுப்பூசி போட்டு சாதனை செய்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் நடக்கும் ஒரு நல்ல செய்தியையும், அமெரிக்காவில் இருந்து பிரசுரமாகும் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவராது. ஏன்? நமது காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி காரர்கள், நமது நாட்டை பற்றி அவதூறாக செய்தி பரப்பி அவற்றை அங்கே பிரசுரிக்க வைப்பார்கள், நல்ல நல்ல செய்திகளை அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X