பக்கீடா: ஆப்கானிஸ்தானில் கிழக்குப் பகுதியில் உள்ள பக்கீடா நகரில் உள்ள சீக்கிய வழிபாட்டு தலமான குருத்வாராவில் சீக்கியர்களின் புனிதக் கொடியாகிய நிசான் சஹிப குருத்வாராவில் உச்சியில் இருந்து தாலிபான்களால் நீக்கப்பட்டது. பின்னர் இந்த புனித கொடி மீண்டும் குருத்வாராவில் உச்சியில் நடப்பட்டதாக இந்திய உலக போர் அமைப்பு தலைவர் புனித் சிங் சந்தோக் தெரிவித்துள்ளார். இது வைரல் ஆகியுள்ளது.
![]()
|
தலிபான் அமைப்பினர் இந்த குருத்வாராவில் பாதுகாவலரிடம் கொடியை நீக்க வலியுறுத்தினார். இதற்கு முக்கிய காரணம் அந்த மாகாணத்தின் சின்னமாக இந்த கொடி அமைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான். இந்தக் கொடி நீக்கப்பட்டு அருகில் இருந்த மரத்தில் கட்டப்பட்டது.
![]()
|
உடனடியாக சந்தோக்குக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து தாலிபான்கள் மீண்டும் குருதுவாராவுக்கு வருகை தந்தனர். மதத்தை குறிக்கும் கொடிக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டதாகவும் தாலிபான்கள் அதனை மீண்டும் உச்சியில் கட்ட அனுமதி தந்ததாகவும் சந்தோக் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement