சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஆக 07, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்: அ.தி.மு.க., ஆட்சியில், பஸ் நிலையங்களில், தாய் பாலுாட்டும் அறைகள் திறக்கப்பட்டன. ஆனால், மின் விசிறி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. எனவே, அடிப்படை வசதி இல்லாமல் இருக்கும் தாய் பாலுாட்டும் அறைகள் சீரமைக்கப்படும்.'டவுட்' தனபாலு: இது, அரசியல் ரீதியிலான கருத்து என்பதில், யாருக்கும், 'டவுட்'டே வராது. ஏனெனில்,

'டவுட்' தனபாலு

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்: அ.தி.மு.க., ஆட்சியில், பஸ் நிலையங்களில், தாய் பாலுாட்டும் அறைகள் திறக்கப்பட்டன. ஆனால், மின் விசிறி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. எனவே, அடிப்படை வசதி இல்லாமல் இருக்கும் தாய் பாலுாட்டும் அறைகள் சீரமைக்கப்படும்.

'டவுட்' தனபாலு: இது, அரசியல் ரீதியிலான கருத்து என்பதில், யாருக்கும், 'டவுட்'டே வராது. ஏனெனில், அனைத்து நகரங்களில் உள்ள பஸ் நிலையங்களிலும் அமைக்கப்பட்டுள்ள, தாய் பாலுாட்டும் அறைகளில் மின் விசிறி, விளக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இப்போது, சில மாதங்களாகத் தான் அவை பொலிவிழந்து காணப்படுகின்றன.


பிரதமர் மோடி:
நாட்டு மக்கள் பலரிடம் இருந்து, 'கேல் ரத்னா' விருதின் பெயரை, 'மேஜர் த்யான் சந்த்' விருது என மாற்ற வேண்டி கோரிக்கைகள் வந்தன. அந்த கோரிக்கைகளுக்கு நன்றி. மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப, 'ராஜிவ் காந்தி கேல் ரத்னா' விருது என்பது இனிமேல், மேஜர் த்யான் சந்த் கேல் ரத்னா விருது என அழைக்கப்படும்.

'டவுட்' தனபாலு: மூன்று வாரங்களுக்கும் மேலாக, பார்லிமென்டின் இரு சபைகளிலும் அமளியில் ஈடுபட்டு, சபைகளை முடக்கியுள்ள காங்கிரசுக்கு, 'செம பைட்' கொடுக்க தயாராகி விட்டீர்களோ என்ற, 'டவுட்' இதன் மூலம் வருகிறது. எப்படியோ, பழைய சட்டங்களை ரத்து செய்வது போல, பழைய தலைவர்களின் பெயர்களையும் ரத்து செய்து விடுவீர்களோ என்ற எண்ணம் மக்களுக்கு வந்துள்ளது.


பத்திரிகை செய்தி
: தமிழக பா.ஜ., தலைவராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக டில்லி சென்றுள்ள அண்ணாமலை, கட்சியை பலப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார். அங்கு மூன்று நாட்கள் தங்கியிருக்கும் அவர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வாழ்த்து பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

'டவுட்' தனபாலு: வழக்கமாக வாழ்த்து பெற டில்லி செல்லும் தலைவர்கள், ஒரே நாளில் வேலையை முடித்து, ஊர் திரும்பி விடுவர். அண்ணாமலையின் மூன்று நாள், 'டூர்' பல விதமான, 'டவுட்'டுகளை, ஆளும் தரப்பிற்கு ஏற்படுத்தியுள்ளது. அதனால் தான், கடந்த சில நாட்களாக ஆளும் கட்சியின் பெரிய தலைவர்கள் கூட, அண்ணாமலையை கடுமையாக சாடி வருகின்றனரோ என்ற, 'டவுட்'டும் ஏற்படுகிறது!ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்:
பாட நுால்களில் உள்ள தலைவர்கள், அறிஞர்கள் பெயரில் உள்ள ஜாதிப் பெயர்கள் நீக்கப்படுகின்றன. இப்போது, தலைவர்களின் பெயரில் உள்ள ஜாதி பெயர்களை நீக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த போக்கை கைவிட வேண்டும்.

'டவுட்' தனபாலு: தமிழக அரசின் இந்த முடிவு, பலத்த சர்ச்சையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் என்பதில் 'டவுட்'டே இல்லை. ஏனெனில், சமுதாயத்திலிருந்து ஜாதியை ஒழிக்க, தலைவர்களின் பெயர்களில் இருக்கும் ஜாதி பெயரை ஒழித்தால் மட்டும் போதாது. தேர்தலில் வேட்பாளர் தேர்வு மற்றும் அமைச்சர்கள் நியமனத்தில் நடக்கும் ஜாதி நடைமுறைகளை தான் முதலில் மாற்ற வேண்டும்!


குஜராத் முன்னாள் முதல்வர் காங்கிரசை சேர்ந்த சங்கர்சிங் வகேலா:
'ராஜிவ் கேல் ரத்னா' விருதின் பெயரை, 'மேஜர் த்யான் சந்த் கேல் ரத்னா' விருது என மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அப்படியானால், குஜராத்தில் உள்ள, 'மோடி ஸ்டேடியம்' பழையபடி, 'சர்தார் படேல் ஸ்டேடியம்' என மாற்றப்பட வேண்டும்.

'டவுட்' தனபாலு: அந்தந்த துறை சார்ந்தவர்களை கவுரவிக்கும் வகையில், விருதுகள், இடங்களின் பெயர்களை வைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான முன்னோட்டமாகத் தான், ராஜிவ் கேல் ரத்னா பெயர் மாற்றப்பட்டுள்ளது. மேலும், தன் பெயரிலான ஸ்டேடியம் பெயரை மாற்ற வைத்து, நாடு முழுவதும் உள்ள நேரு, இந்திரா, ராஜிவ் பெயரிலான இடங்கள், விருதுகளை மாற்ற, பிரதமர் மோடி வியூகம் வகுத்துள்ளாரோ என்ற 'டவுட்' எழுகிறது!


மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல் ஹாசன்:
பிரிட்டிஷ் ஆட்சியின் போது, பெருந்தனக்காரர்களும், ஜமீன்தாரர்களும் அரசுக்கு ஆலோசனை கூற ஏற்படுத்தப்பட்ட அமைப்பே சட்ட மேலவை. ஒவ்வொரு முறை, தி.மு.க., ஆட்சிக்கு வரும் போதும், மேலவை வரும் என பேசப்படுவதும், அதற்குப் பின் ஆட்சிக்கு வரும், அ.தி.மு.க., அதை முறியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. தேவையற்ற மேலவை வேண்டாம்.

'டவுட்' தனபாலு: எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்டு, இரு சபைகளையும் முடக்கியுள்ளனர். இந்நிலையில், சட்ட மேலவை அவசியமா என்ற கேள்வி பலதரப்பிலும் எழுந்துள்ளது. எனினும், பத்தாண்டுகளாக ஆட்சிக்கு வராமல் இருந்த, தி.மு.க., நிறைய பேரை சமாளிக்க வேண்டியுள்ளது. அத்தகையவர்களுக்கு எம்.எல்.சி., பதவி வழங்கி, வாயை அடைக்க முடிவு செய்துள்ளதோ என்ற 'டவுட்' வருகிறது!

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
08-ஆக-202114:35:00 IST Report Abuse
Suppan சர்தார் படேல் ஸ்டேடியம் என்ற பெயரும் வேண்டாமே. நாட்டில் உள்ள காந்தி நேரு ஆகியோர்களின் பெயர்களில் உள்ள எல்லா அமைப்புக்கள் , தெருக்கள் போன்றவற்றின் பெயர்களை மாற்றிவிடலாம். காந்தி குடும்பத்தின் பெயர்கள் மட்டும் ஆயிரக்கணக்கில் இருக்கலாம். எந்த ஒரு அரசியல் தலைவரின் பெயரையும் வைக்க வேண்டாம். அப்படியே முக்குக்கு முக்கு உள்ள இந்தத் தலைவர்களின் சிலைகளையும் எடுத்து அருங்காட்சியகங்களில் வைத்துவிடலாம்.
Rate this:
Cancel
SKANDH - Chennai,இந்தியா
08-ஆக-202110:21:49 IST Report Abuse
SKANDH அத்தகையவர்களை அல்ல அத்தகு கயவர்களை அமர்த்த மேதை வேண்டாம். மக்கள் பணம் வீண். புரட்சி வெடிக்கும்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
08-ஆக-202110:15:12 IST Report Abuse
duruvasar தமிழக அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள் பெயர் நேரு, காந்தி எல்லாம் ஜாதி பெயர்தான். மாற்றுவார்களா. ஸ்டிக்கர் ஒடடுகிற பணிக்கு மாசுவின் விளக்கம் அபாரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X