பேச்சு, பேட்டி, அறிக்கை| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஆக 07, 2021
Share
'போராடுவது உங்கள் தொழிலாகி போனது. இந்த விவகாரம் இல்லாவிட்டாலும், இன்னொரு விவகாரத்திற்காக போராடிக் கொண்டு தான் இருப்பீர்கள் என்பதை, தமிழக மக்கள் அறிவர்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேச்சு: விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாததால், பார்லிமென்டிற்கு உள்ளேயும், வெளியிலும் போராட்டம் நடந்து வருகிறது.

பேச்சு, பேட்டி, அறிக்கை

'போராடுவது உங்கள் தொழிலாகி போனது. இந்த விவகாரம் இல்லாவிட்டாலும், இன்னொரு விவகாரத்திற்காக போராடிக் கொண்டு தான் இருப்பீர்கள் என்பதை, தமிழக மக்கள் அறிவர்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேச்சு: விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாததால், பார்லிமென்டிற்கு உள்ளேயும், வெளியிலும் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை மிரட்டும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


'அப்போ, அவர்கள் நல்ல கட்சியாக, மக்கள் நலம் நாடும் டீமாகத் தான் இருப்பர்...' என, கிண்டலடிக்கத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி:
என் அளவுக்கு, பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை விமர்சனம் செய்த அரசியல் தலைவர்கள் தமிழகத்தில் இல்லை. எனினும் என்னை, பா.ஜ.,வின், 'பி டீம்' என்பவர்கள் தான், பா.ஜ.,வின், 'மெயின் டீம்' ஆக உள்ளனர்.


'பின் எதற்கு அவர், தலைமை பொறுப்பை புறக்கணித்தார். அது, வேண்டாத வேலை தானே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் பேட்டி:
காங்கிரசின் தலைவராக ராகுல் இப்போது இல்லாவிட்டாலும் கூட, அவரைத் தான் கட்சித் தொண்டர்களான நாங்கள், தலைவராக ஏற்றுக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். கட்சியும் அவருக்கான முன்னுரிமையை கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது.


'அப்போ, உங்களை அவர் ரொம்ப நல்ல, 'டிரில்' வாங்குகிறார் என்று சொல்லுங்கள்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேட்டி:
முதல்வர் தன்னை ஒரு மாணவனாக கருதி, எங்களிடம் கேள்வி கேட்கிறார். சில சமயங்களில் பெற்றோராக நினைத்து கேள்வி கேட்கிறார். சில நேரங்களில் ஆசிரியர் இடத்தில் இருந்தபடி கேள்வி கேட்கிறார். அவரின் கேள்விகளுக்கு நாங்கள் பதில் சொல்ல தயாராக இருக்க வேண்டும்.


'வருங்காலத்தில், தி.மு.க., - பா.ஜ., தான் தமிழக அரசியல் போராட்ட கட்சிகளாக இருக்கும் என்பதை நிரூபிக்க துவங்கி விட்டீர்களே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:
தஞ்சையில், பா.ஜ., நடத்திய போராட்டத்தை கண்டு வெகுண்டுள்ள ஒரு குடும்பம், இன்னும் அதிகப்படியாக விமர்சனம் செய்யத் தான் செய்யும். அவர்களின் அரசியல் இரட்டை நிலைப்பாடு, அந்த குடும்பத்திடம் குவிந்துள்ள நிதி ஆதாரம் போன்றவற்றை மக்கள் மத்தியில் இன்னும் அதிகமாக எடுத்துரைப்போம்.


'இப்படி ஒரு போராட்டமா... கிராமங்களில் லோக்சபா கூட்டம் நடத்துவதற்குப் பதில், கிராமங்களில் உள்ள மக்களுக்கு வருமானத்திற்கு ஏதாவது ஒரு வழியை சொல்லலாமே...' என, கூறத் துாண்டும் வகையில், இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் அறிக்கை
:பார்லிமென்ட் ஜனநாயகத்தை மத்திய, பா.ஜ., அரசு குழி தோண்டி புதைத்துள்ளது. அதனால், வரும் 23 - 27 வரை, தமிழகம் முழுவதும் கிராம பஞ்சாயத்துகளில் மக்கள் லோக்சபா கூட்டங்கள் கூட்டி விவாதிக்கப்படும்.


'எதிர்க்கட்சிகளின் எண்ண ஓட்டத்தை சரியாக புரிந்து கொண்டுள்ளதோ, மத்திய அரசு...' என, கேட்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ராமகிருஷ்ணன் பேட்டி
: லோக்சபாவில், தற்போதைய போராட்ட சூழலை சாதகமாக பயன்படுத்தி, பல்வேறு மசோதாக்களை, ஆளும் தரப்பினர் சட்டம் ஆக்குகின்றனர்.


'அப்போ, ஒரேயடியாக, 'வீணாக இப்படி கூட்டம் கூடாதீர்கள்... அவரவர் தங்கள் சொந்த வேலைகளைப் பாருங்கள்' என, கட்சியினருக்கு அறிவுரை கூறி விடலாமே...' என, கூறத் துாண்டும் வகையில், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு பேச்சு:
கொரோனா காலத்தில் நம்மை நாமே காப்பாற்றி கொள்ள வேண்டும். எனவே, அரசு நிகழ்ச்சியில், தலைவர்களை நெருங்கி கைத்தறி ஆடை அணிவிப்பதை, கட்சி நிர்வாகிகள் நிறுத்த வேண்டும்.


'ஆட்சிக்கு, பா.ஜ., வந்தாலும், இரண்டே மாதங்களில் அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியாது...' என, கூறத் துாண்டும் வகையில், தமிழக பா.ஜ., பொருளாளர் சேகர் அறிக்கை:
செயல்படுத்த முடியாது என்று தெரிந்தும், அள்ளி வீசிய வாக்குறுதிகளை, அரசின் நிதி நிலைமையை காரணம் காட்டி, நிறைவேற்ற முடியவில்லை எனச்சொல்லி, தி.மு.க., தப்பிக்க நினைக்கிறது. அரசின் வெள்ளை அறிக்கை, ஓர் அரசியல் 'ஸ்டண்ட்!'


'மக்கள் கொந்தளிக்கின்றனரோ இல்லையோ, அ.தி.மு.க.,வினர் நன்றாக இந்த விவகாரத்தை பயன்படுத்திக் கொண்டுள்ளனர்...' என, கூறத் துாண்டும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அறிக்கை:
'ஷாக்' அடிக்கும் கரன்ட் பில். மின் சாதனம் இயங்கினாலும், இயங்காவிட்டாலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பகல் கொள்ளை அல்லவா இது... கொதிக்கும் கரன்ட் பில்; கொந்தளிப்பில் மக்கள்!


'தென் மாவட்டங்களின் நிலைமை மிக மோசமாக உள்ளது. அதுபற்றி பேச தலைவர்கள் பொதுவாக விரும்புவதில்லை...' என, சொல்லத் தோன்றும் வகையில், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி:
எத்தனை ஆண்டுகள் ஆனாலும், தென் மாவட்டங்கள் வளர்ச்சி அடையவே இல்லை. 'முதலீட்டின் முகவரி தமிழகம்' என முதல்வர் ஸ்டாலின் கூறி, 85 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை பெறும் தொழிற்சாலைகளை நிறுவுவதாக கூறியுள்ளார். இந்த ஆலைகள் சென்னை, ஓசூரில் அமைகின்றன. இதனால் தென் மாவட்டங்கள் எவ்வாறு வளர்ச்சி பெறும்?

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X