பொது செய்தி

தமிழ்நாடு

15 பயனாளிக்கு நலத்திட்ட உதவி

Added : ஆக 07, 2021
Share
Advertisement
சென்னை:கருணாநிதி நினைவு தினத்தை ஒட்டி, 'உங்கள் தொகுதியில் முதல்வர்' துறையில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் பெறப்பட்ட 2,581 மனுக்களில், 1,170 மனுக்கள் ஏற்கப்பட்டன. அவற்றில் இருந்து, 15 பயனாளிகளை, தலைமை செயலகத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் வரவழைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இவர்களில் ஆறு பயனாளிகளுக்கு, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட, பெட்ரோல் ஸ்கூட்டர்; இரண்டு
 15 பயனாளிக்கு  நலத்திட்ட உதவி

சென்னை:கருணாநிதி நினைவு தினத்தை ஒட்டி, 'உங்கள் தொகுதியில் முதல்வர்' துறையில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் பெறப்பட்ட 2,581 மனுக்களில், 1,170 மனுக்கள் ஏற்கப்பட்டன. அவற்றில் இருந்து, 15 பயனாளிகளை, தலைமை செயலகத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் வரவழைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவர்களில் ஆறு பயனாளிகளுக்கு, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட, பெட்ரோல் ஸ்கூட்டர்; இரண்டு பயனாளிகளுக்கு, மூன்று சக்கர வாகனம்; ஒரு பயனாளிக்கு சக்கர நாற்காலி; ஒரு பயனாளிக்கு தையல் இயந்திரம்; இரண்டு பயனாளிகளுக்கு திறன்பேசி. இரண்டு பயனாளிகளுக்கு காதொலிக் கருவி; ஒரு பயனாளிக்கு, 'பேட்டரி'யால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி போன்றவை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், தலைமை செயலர் இறையன்பு, உங்கள் தொகுதியில் முதல்வர் துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X