பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் மனமிரங்க தங்கர்பச்சான் வேண்டுதல்

Added : ஆக 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'மின்சார கட்டண கொள்ளையை தடுக்க, முதல்வர் மனமிரங்க வேண்டும்' என, திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:அரசு ஊழியர்கள் மாதாந்திர அடிப்படையில், ஒரு நாள் கூட தாமதமாகாமல் ஊதியம் பெறுகின்றனர். ஆனால், மின் கட்டண கணக்கெடுப்பு மட்டும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை குறிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் கணக்கெடுத்திருந்தால், 16 ஆயிரம்

சென்னை:'மின்சார கட்டண கொள்ளையை தடுக்க, முதல்வர் மனமிரங்க வேண்டும்' என, திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:அரசு ஊழியர்கள் மாதாந்திர அடிப்படையில், ஒரு நாள் கூட தாமதமாகாமல் ஊதியம் பெறுகின்றனர். ஆனால், மின் கட்டண கணக்கெடுப்பு மட்டும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை குறிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் கணக்கெடுத்திருந்தால், 16 ஆயிரம் ரூபாய் மட்டுமே, என் வீட்டிற்கு மின்சார கட்டணமாக செலுத்த வேண்டி வந்திருக்கும். ஆனால், கடந்த மாதத்தில், 36 ஆயிரம் ரூபாய் செலுத்தி உள்ளேன்.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என கணக்கெடுக்கப்படுவதால், இரண்டேகால் மடங்கு அதிகமாக செலுத்த வேண்டியுள்ளது. தி.மு.க., தேர்தல் அறிக்கைகளில், இந்த மின்சார கட்டண கொள்ளையை தடுக்கும் விதமாக, ஒவ்வொரு மாதமும் கட்டணம் செலுத்தும் முறையைக் கொண்டு வருவோம் என, முதல்வர் கூறியிருந்தார்.

இந்நிலையில், அடுத்த மாத மின் கட்டணம் செலுத்தும் தேதியை எண்ணி அஞ்சுகிறேன். ஒரு வீட்டின் மின் கட்டண செலவே, இவ்வளவு என்றால், மற்ற குடும்ப செலவுகளை, எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியவில்லை.உடனடியாக, மாதாந்திர மின் கட்டண முறையை அறிவித்து, உதவ வேண்டுகிறேன்.இவ்வாறு தங்கர்பச்சான் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
08-ஆக-202114:20:39 IST Report Abuse
vpurushothaman வீட்டுக்கு வீடு இன்று தங்கர் பச்சான் குரலே எதிரொலிக்குது. ஷாக் எல்லை மீறிப் போகுது சார் .மின் அமைச்சர் ஊரிலிருக்கிறாரா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X