பொது செய்தி

தமிழ்நாடு

திரையில் மீண்டும் நடிகர் வடிவேலு!

Added : ஆக 07, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:நீண்ட இடைவெளிக்கு பின், நடிகர் வடிவேலுவை, திரையில் காணும் வாய்ப்பு உருவாகிஉள்ளது.தேர்தல் பிரசாரம் காரணமாக, சினிமா வாய்ப்பை தவற விட்ட நடிகர் வடிவேலு, நீண்ட காலமாக, சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். மேலும், 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' பட விவகாரத்தாலும், புதுப்படங்களில் அவரால் ஒப்பந்தமாக முடியாமல் போனது. தற்போது, வடிவேலு பிரபலமான, ஓ.டி.டி., தளம் வாயிலாக நடிக்க
 திரையில் மீண்டும் நடிகர் வடிவேலு!

சென்னை:நீண்ட இடைவெளிக்கு பின், நடிகர் வடிவேலுவை, திரையில் காணும் வாய்ப்பு உருவாகிஉள்ளது.

தேர்தல் பிரசாரம் காரணமாக, சினிமா வாய்ப்பை தவற விட்ட நடிகர் வடிவேலு, நீண்ட காலமாக, சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். மேலும், 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' பட விவகாரத்தாலும், புதுப்படங்களில் அவரால் ஒப்பந்தமாக முடியாமல் போனது. தற்போது, வடிவேலு பிரபலமான, ஓ.டி.டி., தளம் வாயிலாக நடிக்க வருகிறார்.

தெலுங்கில் பிரபலமாக உள்ள, 'ஆஹா' ஓ.டி.டி., தளம், தமிழில் கால் பதிக்க உள்ளது. இதற்காக, புதிய நிகழ்ச்சிகளை, அந்நிறுவனம் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது. அந்த வகையில், காமெடி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க, 'ஆஹா' நிறுவனம், வடிவேலுவை அணுகியுள்ளது. வடிவேலுவும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
E. RAJAVELU - Chennai,இந்தியா
14-ஆக-202119:09:27 IST Report Abuse
E. RAJAVELU நல்ல (கேப்டன் விஜயகாந்த்) மனிதரை வசை பாடிய இவன் வாழ்க்கை கேவலமாக சீரழிந்து போகும்.
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
08-ஆக-202102:09:29 IST Report Abuse
BASKAR TETCHANA ஆடிய ஆட்டம் என்ன இப்போ அடங்கி கிடைப்பதென்ன என்பதை மறக்காதே. பொன்தடைவை இருந்தது போல் உன் மார்க்கெட் இருக்காது. மக்களிடம் உன்னுடைய வாய்ஸ் குறைந்து விட்டது.
Rate this:
GOPAL - cochin,இந்தியா
12-ஆக-202120:07:23 IST Report Abuse
GOPALஏன் சார் இப்படி சொல்றீங்க சந்தோசமா வரட்டுமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X