அரசியல் செய்தி

தமிழ்நாடு

இனி தி.மு.க., ஆட்சி: முதல்வர் அறிக்கை

Added : ஆக 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'தமிழகத்தில் இனி தி.மு.க., ஆட்சியே என்ற பெரும் உறுதிமொழியை எடுப்போம்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை:கருணாநிதி மறைந்து மூன்று ஆண்டுகளாகி விட்டன.அவர் மறைய வில்லை; நம்முள் இருந்து நம்மை வழிநடத்தி வருகிறார். தி.மு.க., ஆட்சி மலர வேண்டும் என, கனவு கண்டார். அந்தக் கனவை மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் நிறைவேற்றிக் காட்டினோம்.தி.மு.க., ஆட்சி

சென்னை:'தமிழகத்தில் இனி தி.மு.க., ஆட்சியே என்ற பெரும் உறுதிமொழியை எடுப்போம்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை:கருணாநிதி மறைந்து மூன்று ஆண்டுகளாகி விட்டன.அவர் மறைய வில்லை; நம்முள் இருந்து நம்மை வழிநடத்தி வருகிறார். தி.மு.க., ஆட்சி மலர வேண்டும் என, கனவு கண்டார். அந்தக் கனவை மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் நிறைவேற்றிக் காட்டினோம்.தி.மு.க., ஆட்சி அமைந்தால் என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என, கருணாநிதி கனவு கண்டாரோ, அத்தகைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

தனக்கு பின்பும், தான் இருந்து நடத்துவதை போலவே கட்சியும், ஆட்சியும் இருக்க வேண்டும் என, கருணாநிதி ஆசைப்பட்டார். அந்த ஆசையை, இந்த மூன்றாண்டு காலத்தில் நிறைவேற்றி வருகிறேன் என்பதே என் நிம்மதி பெருமூச்சு.இனி தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியே என்ற பெரும் உறுதிமொழியை நாம் எடுப்போம்.

தமிழை, தமிழர்களை, தமிழகத்தை, திராவிட இயக்க சிந்தனையின் அடிப்படையில் வளர்த்தெடுக்க உறுதியேற்போம்.நுாற்றாண்டு காணப்போகும் கருணாநிதியின் புகழ், 1,000 ஆண்டுகள் நிலைத்திருக்க அரும்பணியாற்றுவோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
08-ஆக-202107:00:14 IST Report Abuse
Bhaskaran உடன்பிறப்புகளின் கையில் தான் இருக்கிறது முதல்வரின் ஆசை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X