ரூ.16 கோடி மதிப்புள்ள ஊசி : தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு செலுத்தப்பட்டது

Updated : ஆக 07, 2021 | Added : ஆக 07, 2021 | கருத்துகள் (8)
Advertisement
நாமக்கல்:தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி மித்ராவுக்கு, பெங்களூரு மருத்துவமனையில், 16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசி மருந்து செலுத்தப்பட்டது.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்தவர் சதீஸ்குமார். அவரது மகள் மித்ரா. அவர், தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு, 16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசி போட வேண்டும் என, மருத்துவர்கள்

நாமக்கல்:தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி மித்ராவுக்கு, பெங்களூரு மருத்துவமனையில், 16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசி மருந்து செலுத்தப்பட்டது.



latest tamil news




நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்தவர் சதீஸ்குமார். அவரது மகள் மித்ரா. அவர், தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு, 16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசி போட வேண்டும் என, மருத்துவர்கள் தெரிவித்தனர்.அதையடுத்து, பொதுமக்கள் வழங்கிய நன்கொடை மூலம், சிறுமிக்கு ஊசி மருந்து போடப்பட்டது.


இது குறித்து, சிறுமி மித்ராவின் தந்தை சதீஸ்குமார் கூறியதாவது:எங்கள் மகள் மித்ரா, தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். அவரது சிகிச்சைக்காக, ஸ்விட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்படும் ஊசி மருந்து தேவைப்பட்டது. அதன் விலை, 16 கோடி ரூபாய்.
அந்த ஊசியை, இந்தியாவில் இறக்குமதி செய்ய, ஆறு கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என தெரிவித்தனர். பொதுமக்கள் கொடுத்த நன்கொடை மூலம், 16 கோடி ரூபாய் சேர்ந்து விட்டது.


பொதுமக்கள் கொடுத்த பணம் மருந்துக்கு மட்டுமே போதுமனதாக இருந்தது. இறக்குமதி வரி ரத்து செய்தால் மட்டுமே, இந்த மருந்து எங்கள் மகளுக்கு கிடைக்கும் எனும் நிலை இருந்தது.
பிரதமர் உள்ளிட்ட அனைத்து தலைவர்கள், அதிகாரிகள் மனது வைத்து, இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்தோம். கடவுள் அருளால், மத்திய அரசு, இறக்குமதி வரியான, ஆறு கோடி ரூபாயை ரத்து செய்தது.


latest tamil news



அதற்கான கடிதம், இணையதளம் மூலம் அனுப்பி வைத்தனர். நேற்று, எங்கள் மகள் மித்ராவுக்கு, பெங்களூரு மருத்துவனமனையில் ஊசி மருந்து செலுத்தப்பட்டது. ஓரிரு நாட்களில், சிகிச்சைக்கு பின், ஊர் வந்துவிடுவோம். எங்கள் மகள் வாழ உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
14-ஆக-202111:05:09 IST Report Abuse
Sankare Eswar வாழ்க வளமுடன் நலமுடன். இறைவன் ஆசியால் சாதனைகள் பல நீ புரிய வாழ்த்துகிறேன் செல்லமே.
Rate this:
Cancel
08-ஆக-202114:31:25 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K சிறுமிக்கு வாழ்த்துக்கள். நீடூழி வாழ வேண்டும் என்று ஆசிர்வதிக்கிறேன். பகவானின் அருள் அந்த சிறுமிக்கு என்றும் உண்டு.தசை நார் சிதைவு நோய்க்கு இந்தியாவிலேயே குறைந்த செலவில் கிடைக்க கூடிய மருந்து கண்டுபிடிக்க வேண்டும்.
Rate this:
Cancel
R Kumar - Triolet,மொரிஷியஸ்
08-ஆக-202109:35:27 IST Report Abuse
R Kumar நீடூடி வாழ வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X