பொது செய்தி

தமிழ்நாடு

தயாரிப்பாளர் சங்கம் 'பெப்சி' ஒப்பந்தம் ரத்து

Added : ஆக 07, 2021
Share
Advertisement
சென்னை:தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், 'பெப்சி' எனப்படும், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் இடையேயான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின், அவசர செயற்குழு கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. இதில், பெப்சி உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து, தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.இது குறித்து தயாரிப்பாளர் சங்க

சென்னை:தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், 'பெப்சி' எனப்படும், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் இடையேயான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின், அவசர செயற்குழு கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. இதில், பெப்சி உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து, தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இது குறித்து தயாரிப்பாளர் சங்க அறிக்கை:தமிழ் திரையுலகம் சுமுகமாக, பொருளாதார இழப்பை தவிர்க்கும் வகையில் இயங்க, தயாரிப்பாளர்கள் மற்றும் பெப்சி தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தப்பட்டது. அதற்கு முழு ஒத்துழைப்பு தருவதாக, ஆர்.கே.செல்வமணி தலைமையிலான, பெப்சி நிர்வாகிகள் சம்மதித்தனர்.

ஆனால், அடுத்த நாளே, ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்களின் நலன்களை சீர்குலைக்கும் வகையில், தன்னிச்சையாக செயல்பட்டார். எனவே, பெப்சி உடனானஒப்பந்தம் ஆகஸ்ட் 6 முதல், தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களை கட்டுப்படுத்தாது என, தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.இனி, தயாரிப்பாளர்கள் தங்களுக்கு தேவையானவர்களை பணியமர்த்தி, படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம்.

தயாரிப்பாளர் சங்கத்தை அலட்சியப்படுத்தும், தொழிலாளர்கள் சம்மேளனத்துடன், இனி எந்த ஒரு பேச்சும் கிடையாது. படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X