பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.140 கோடிக்கு கொரோனா வார்டு கணக்கு பார்க்க நிதித் துறை முடிவு

Added : ஆக 07, 2021
Share
Advertisement
சென்னை:பொதுப்பணித்துறையால், 140 கோடி ரூபாய்க்கு, அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட, கொரோனா வார்டு பணிகளுக்கு கணக்கு பார்க்க, நிதித்துறை முடிவு செய்துள்ளது.கொரோனா இரண்டாவது அலையால், மே மாதம் பலரும் பாதிக்கப்பட்டனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, சென்னை உட்பட மாநிலம் முழுதும் 72

சென்னை:பொதுப்பணித்துறையால், 140 கோடி ரூபாய்க்கு, அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட, கொரோனா வார்டு பணிகளுக்கு கணக்கு பார்க்க, நிதித்துறை முடிவு செய்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலையால், மே மாதம் பலரும் பாதிக்கப்பட்டனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, சென்னை உட்பட மாநிலம் முழுதும் 72 அரசு மருத்துவமனை களில், ஆக்சிஜன் படுக்கை வசதிகளை ஏற்படுத்த அரசு உத்தரவிட்டது. பொதுப்பணித் துறை மருத்துவப் பணிகள் பிரிவுக்கு 140 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

ஒப்பந்ததாரர்கள் வாயிலாக, இப்பணிகள் நடந்தன. சென்னையில் மட்டும் 80 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே உள்ள கட்டடங்களில், கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து, ஆக்சிஜன் படுக்கை பற்றாக்குறை முடிவுக்கு வந்தது.இப்பணிகளை செய்த ஒப்பந்ததாரர்கள், தங்களுக்கான தொகையை கேட்டு வருகின்றனர். மேல்மட்டத்தில், 'கமிஷன்' ஏதும் வாங்காமல் பணிகள் நடந்த நிலையில், அதன் தரத்தை ஆய்வு செய்த பின்னரே, 'பில்' தொகை வழங்க, நிதித்துறை முடிவு செய்துள்ளது.

இதற்காக, ஒவ்வொரு மருத்துவமனையிலும் நடந்த கொரோனா வார்டு பணிகளை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. முறையான ஆய்வுக்கு பின், கணக்கு சரிபார்ப்பு செய்யப் பட்டு, ஒப்பந்ததாரர்களுக்கு, பில் வழங்கப்பட உள்ளது. இதனால், அரைகுறையாக பணிகள் செய்த ஒப்பந்ததாரர்களும், கூடுதல் செலவு கணக்கு காட்டிய அதிகாரிகள் அனைவரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X