கொரோனா தடுப்பில் அலட்சியம் வேண்டாம்:சுகாதாரத் துறை எச்சரிக்கை | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பில் அலட்சியம் வேண்டாம்:சுகாதாரத் துறை எச்சரிக்கை

Updated : ஆக 09, 2021 | Added : ஆக 07, 2021 | கருத்துகள் (4)
Share
'பண்டிகை காலம் துவங்க உள்ளதால், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் மக்கள் சிறிதும் அலட்சியம் காட்டக் கூடாது. அலட்சியமாக செயல்பட்டால் மூன்றாவது அலை பாதிப்பை தவிர்க்க முடியாது' என, சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.உலக நாடுகளை கொரோனா பெருந்தொற்று ஆட்டிப் படைத்து வருகிறது. தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலை பரவல் முடிந்து, இப்போது பல நாடுகளில்
கொரோனா   தடுப்பு, அலட்சியம்.,பண்டிகைகள், எச்சரிக்கை

'பண்டிகை காலம் துவங்க உள்ளதால், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் மக்கள் சிறிதும் அலட்சியம் காட்டக் கூடாது. அலட்சியமாக செயல்பட்டால் மூன்றாவது அலை பாதிப்பை தவிர்க்க முடியாது' என, சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உலக நாடுகளை கொரோனா பெருந்தொற்று ஆட்டிப் படைத்து வருகிறது. தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலை பரவல் முடிந்து, இப்போது பல நாடுகளில் மூன்றாவது அலை பரவத் துவங்கியுள்ளது.நம் நாட்டில் கடந்த ஆண்டு மார்ச்சில் கொரோனா முதல் அலை பரவியது. அக்., வரை அதிகமாக இருந்த பாதிப்பு, நவம்பரில் குறையத் துவங்கியது.
பாதிப்புதொற்று பரவல் முடிந்துவிட்டது என மக்கள் கருதிய நிலையில், கடந்த மார்ச்சில் இரண்டாவது அலை பரவ ஆரம்பித்தது. ஏப்., மே மாதங்களில் தொற்றால் பாதிக்கப்படு வோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. மே 8ம் தேதிக்கு பின், தொற்று பரவல் குறையத் துவங்கியது. பாதிப்பு வேகமாக குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொற்று பரவல் அதிகரித்துள்ளது, அனைத்து தரப்பையும் கவலை அடைய வைத்துள்ளது.

தினசரி பாதிப்பு 30 ஆயிரமாக குறைந்த நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளது.'கொரோனா மூன்றாவது அலை இந்த மாதத்தில் பரவி, அக்டோபரில் உச்சத்தை எட்டும்' என, உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கணித்துஉள்ளனர்.இது பற்றி 'எய்ம்ஸ்' மருத்துவமனை இயக்குனர் குலேரியா கூறியதாவது:மூன்றாவது அலை செப்டம்பரில் தான் பரவும் என கணித்திருந்தேன். ஆனால், நடப்பு மாத்ததிலேயே பரவும் அபாயம் உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் முழுமையாக கடைப்பிடிக் காததே காரணம். இரண்டாவது அலை பரவியதற்கும் இது தான் முக்கிய காரணமாக இருந்தது.நாடு முழுதும் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்பட்டு, வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டு விட்டன; போக்குவரத்தும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மக்கள் வெளியில் செல்கின்றனர். இதனால், மூன்றாவது அலை பரவலை தவிர்ப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது.
விநாயகர் சதுர்த்திபல நாடுகளும் இந்தப் பிரச்னையை சந்தித்து வருகின்றன. ஸ்பெயின், நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் மக்களின் அலட்சியத்தால், கொரோனா பரவல் 300 சதவீதம் அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:நாட்டில் பண்டிகை காலம் துவங்கியுள்ளது. ரக் ஷா பந்தன், ஓணம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மிலாடி நபி, நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ் என டிசம்பர் வரை பண்டிகைகள் வர உள்ளன. இந்த காலக்கட்டத்தில் புதிய ஆடைகள், பொருட்கள் வாங்க மக்கள் கூட்டமாகக் கூடுவது வழக்கம்.

கொரோனா இரண்டாவது அலை நம்மை விட்டு இன்னும் போகவில்லை. அதனால், பண்டிகை காலங்களில் கூட்டமாக கூடுவதை மக்கள் தவிர்ப்பது நல்லது. வீட்டிற்குள்ளேயே பண்டிகைகளை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். வெளியில் சென்றாலும், முக கவசம் அணிந்து தான் செல்ல வேண்டும். சமூக இடைவெளியை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். கிருமி நாசினிகள் வாயிலாக கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
இன்னும் மூன்று மாதங்களுக்கு மக்கள் எச்சரிக்கையுடன் இருந்தால், இரண்டாவது அலை முடிந்து, மூன்றாவது அலை பாதிப்பில் இருந்தும் தப்பிக்கலாம்.தொற்று தடுப்பில் அலட்சியம் என்ற பேச்சுக்கே இடம் இருக்கக் கூடாது. முதல் மற்றும் இரண்டாவது அலையில் நாம் சந்தித்த பிரச்னைகளை சிறிதும் மறந்துவிடக் கூடாது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர். - நமது சிறப்பு நிருபர் -


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X