சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தீவிரம்

Added : ஆக 07, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை:சென்னையில் நடக்க உள்ள சுதந்திர தின விழாவிற்கு, குறைந்த நபர்களை மட்டும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை, கோட்டையில் நடக்கும் சுதந்திர தின விழாவில், முதல் முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், கோட்டை கொத்தளத்தில், தேசியக் கொடியேற்ற உள்ளார். அங்கு சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கோட்டை கொத்தளத்தில், புதிய வர்ணம்

சென்னை:சென்னையில் நடக்க உள்ள சுதந்திர தின விழாவிற்கு, குறைந்த நபர்களை மட்டும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, கோட்டையில் நடக்கும் சுதந்திர தின விழாவில், முதல் முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், கோட்டை கொத்தளத்தில், தேசியக் கொடியேற்ற உள்ளார். அங்கு சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

கோட்டை கொத்தளத்தில், புதிய வர்ணம் பூசப்பட்டுள்ளது. கோட்டை முன்பாக, பார்வையாளர்கள் அமர, மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மழை வந்தால், நனையாமல் இருக்க, மேற்கூரையும் அமைக்கப்பட்டுள்ளது.தொற்று பரவல் தொடர்வதால், இருக்கைகள், இடைவெளி விட்டு போடப்படுகின்றன. அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், துாதரக அதிகாரிகள் ஆகியோருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட உள்ளன.

சிறப்பு அழைப்பாளர்களாக, குறைந்த நபர்களை அழைக்கவும், பார்வையாளர்களுக்கு தடை விதிக்கவும் ஆலோசனை நடந்து வருகிறது. மேலும் விழா ஒத்திகை நடந்தது. நாளை இரண்டாவது ஒத்திகை, 13ம் தேதி இறுதி ஒத்திகை நடக்க உள்ளது. ஒத்திகையில் பங்கேற்ற போலீசார், முறையாக முககவசத்தை அணியாமல், கழுத்தில் தொங்கவிட்டிருந்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X