கருணாநிதி நினைவு நாள்: கோவையில் அனுசரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி நினைவு நாள்: கோவையில் அனுசரிப்பு

Added : ஆக 07, 2021
Share
போத்தனூர்:மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாவது நினைவு நாள், நேற்று தி.மு.க.,வினரால் அனுசரிக்கப்பட்டது.போத்தனூர், நியூ டவுன் பகுதியில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமையில், மாவட்ட பிரதிநிதி நிசார் அகமது மற்றும் கட்சியினர், கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். ஆயிரம் பேருக்கு, மாஸ்க் மற்றும் உணவு

போத்தனூர்:மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாவது நினைவு நாள், நேற்று தி.மு.க.,வினரால் அனுசரிக்கப்பட்டது.போத்தனூர், நியூ டவுன் பகுதியில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமையில், மாவட்ட பிரதிநிதி நிசார் அகமது மற்றும் கட்சியினர், கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். ஆயிரம் பேருக்கு, மாஸ்க் மற்றும் உணவு வழங்கப்பட்டது.மதுக்கரை மார்க்கெட், ஆட்டோ ஸ்டாண்டில், கலை, இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் ராஜேந்திரன், மதுக்கரை ஒன்றிய மத்திய பகுதி பொறுப்பாளர் ராஜேந்திரன் மற்றும் கட்சியினர், கருணாநிதியின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர். ஒத்தக்கால் மண்டபம், பிரிமியர் நகர், மில் கேட் பகுதிகளில் நடந்த நிகழ்ச்சியில், மதுக்கரை ஒன்றிய கிழக்கு பகுதி பொறுப்பாளர் ராஜசேகரன், முன்னாள் கவுன்சிலர் அமிர்தராஜ் மற்றும் கட்சியினர், கருணாநிதியின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர்.அன்னுாரில்...அன்னூர் வட்டாரத்தில், கணேசபுரம், பஸ் ஸ்டாப்பில், தி.மு.க., தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் சத்தியமூர்த்தி தலைமையில், கருணாநிதி படத்திற்கு, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.அன்னூர் கைகாட்டியில், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆனந்தன் தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், நகர பொறுப்பாளர் பரமேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள், மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X