அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி நினைவு தினம் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

Added : ஆக 07, 2021
Share
Advertisement
சென்னை:மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதியின், மூன்றாம் ஆண்டு நினைவு தினம், தமிழகம் முழுதும் அனுசரிக்கப்பட்டது.சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், இருபுறமும் யானைகள் வாழ்த்துவது போல், மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், கருணாநிதி நினைவிடம் சென்று, மலர் துாவி

சென்னை:மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதியின், மூன்றாம் ஆண்டு நினைவு தினம், தமிழகம் முழுதும் அனுசரிக்கப்பட்டது.

சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், இருபுறமும் யானைகள் வாழ்த்துவது போல், மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், கருணாநிதி நினைவிடம் சென்று, மலர் துாவி மரியாதை செலுத்தினர். அருகில் உள்ள அண்ணாதுரை நினைவிடத்திற்கு சென்றும், மரியாதை செலுத்தினர்.

அதன்பின், கருணாநிதி வசித்த கோபாலபுரம் வீட்டிற்கு சென்று, குடும்பத்தினருடன் அவரது படத்திற்கு, முதல்வர் மரியாதை செலுத்தினார். அதன்பின், சி.ஐ.டி., காலனியில் உள்ள ராசாத்தி வீடு, முரசொலி அலுவலகம் ஆகியவற்றுக்கு சென்று, அங்கு கருணாநிதி படத்திற்கு, மலர் துாவி மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து, கட்சி அலுவலகமான அறிவாலயம் சென்று, அங்கு அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்

.தமிழகம் முழுதும் தி.மு.க.,வினர் ஆங்காங்கே, பொது இடங்களில் கருணாநிதி படத்தை மலர்களால் அலங்கரித்து, மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X