ராஜ்யசபாவில் கடந்த வாரம் 8 மசோதாக்கள் நிறைவேற்றம்

Added : ஆக 07, 2021
Share
Advertisement
புதுடில்லி:போன் ஒட்டு கேட்பு பிரச்னையால் மூன்று வாரங்களாக பார்லி.,யை எதிர்க்கட்சிகள் முடக்கி வரும் போதிலும், கடந்த வாரம் ராஜ்யசபாவில் எட்டு மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டன. கடந்த மாதம் 19ல் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியது. போன் ஒட்டு கேட்பு விவகாரத்தை முன் வைத்து எதிர்க்கட்சிகள் பார்லிமென்டை முடக்கி வருகின்றன. இந் நிலையில் ராஜ்யசபா அதிகாரிகள்

புதுடில்லி:போன் ஒட்டு கேட்பு பிரச்னையால் மூன்று வாரங்களாக பார்லி.,யை எதிர்க்கட்சிகள் முடக்கி வரும் போதிலும், கடந்த வாரம் ராஜ்யசபாவில் எட்டு மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டன.

கடந்த மாதம் 19ல் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியது. போன் ஒட்டு கேட்பு விவகாரத்தை முன் வைத்து எதிர்க்கட்சிகள் பார்லிமென்டை முடக்கி வருகின்றன. இந் நிலையில் ராஜ்யசபா அதிகாரிகள் கூறியதாவது:

பார்லி., மழைக்கால கூட்டத்தொடரின் முதல் வாரம் ராஜ்யசபாவில் திட்டமிடப்பட்ட அலுவல்களில், எதிர்க்கட்சிகளின் அமளியால் 32.20 சதவீத பணிகள் மட்டுமே நடந்தன; இது இரண்டாவது வாரம் 13.70 சதவீதமாக குறைந்தது. மூன்றாவது வாரம் 24.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. அமளிக்கு இடையிலும் கடந்த வாரத்தில் எட்டு மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டன.

இது தொடர்பான விவாதத்தில் 17 கட்சிகளை சேர்ந்த 68 எம்.பி.,க்கள் பங்கேற்றனர். இதற்காக 3.25 மணி நேரம் செலவானது. ஒட்டு மொத்தமாக மூன்று வாரங்களில் அலுவலுக்கான 78.30 மணி நேரத்தில் எதிர்க்கட்சிகள் அமளியால் 60.28 மணி நேரம் வீணானது. அலுவல் நடந்த 17.44 மணி நேரத்தில் மசோதாக்களுக்கு 4.49 மணி நேரம், கேள்விகளுக்கு 3.19 மணி நேரம், கொரோனா தொடர்பான விவாதத்திற்கு 4.37 மணி நேரம் செலவானது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X