காங்., கபட நாடகம்: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு

Updated : ஆக 09, 2021 | Added : ஆக 07, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
போபால் :''ஏழைகள் என்ற வார்த்தையை ஒரு நாளில் குறைந்தபட்சம் நூறு முறை உச்சரித்து காங்., கட்சியினர் கபட நாடகம் ஆடி வந்தனர். ஆனால் ஏழைகள் நலனுக்காக அவர்கள் எதுவுமே செய்யவில்லை,'' என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. பிரதமர் ஏழ்மை ஒழிப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற்ற
காங்.,  பிரதமர் நரேந்திர மோடி., கடும் தாக்கு

போபால் :''ஏழைகள் என்ற வார்த்தையை ஒரு நாளில் குறைந்தபட்சம் நூறு முறை உச்சரித்து காங்., கட்சியினர் கபட நாடகம் ஆடி வந்தனர். ஆனால் ஏழைகள் நலனுக்காக அவர்கள் எதுவுமே செய்யவில்லை,'' என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. பிரதமர் ஏழ்மை ஒழிப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற்ற இம்மாநிலத்தைச் சேர்ந்த சிலருடன் 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார்.
உறுதி செய்தோம்அப்போது அவர் பேசியதாவது: நாட்டில் இதற்கு முன் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொரு நாளும் நுாறு முறையாவது ஏழைகள் என்ற வார்த்தையைஉச்சரித்திருப்பர். ஏதோ பாடல் பாடுவதைப் போல கூறியுள்ளனர். ஆனால் ஏழைகளின் நலனுக்காக அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை.அரசு நிர்வாக முறையில் இருந்த பிரச்னைகளே இதற்கு முக்கிய காரணம். ஏழைகளை சரியாக அடையாளம் பார்த்து அவர்கள் வாழ்க்கையை மேம்படுவதற்கான திட்டங்களை பா.ஜ., அரசு, தன் முதல் நாளில் இருந்து செயல்படுத்தி வருகிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தின்போது 80 கோடி ஏழை மக்களுக்கு உணவு தானியங்கள், ரேஷன் வாயிலாக இலவசமாக வழங்கப்பட்டது. அதேபோல் அவர்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்ந்து கிடைப்பதையும் உறுதி செய்தோம்.சாலை, மின்சாரம், வீட்டு வசதி 'காஸ்' இணைப்பு, வங்கி கணக்கு கிடைப்பதற்கு காங்கிரஸ் ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். ஆனால் பேச்சு மட்டுமே இருந்தது. இது, காங்.,கின் கபட நாடகம்.


'மேக் இன் இந்தியா'உண்மையில் ஏழைகளின் மீது அக்கறை இருந்தால் அவர்களுக்கு தேவையான வசதிகள் கிடைப்பதை உறுதி செய்திருக்க வேண்டும்.கொரோனாவால் மற்ற நாடுகளைவிட மிகப் பெரிய சவாலை் நாம் சந்தித்தோம். மிகப் பெரிய மக்கள்தொகை உள்ள நிலையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் காப்பாற்றியுள்ளோம்.உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரித்துள்ளோம். இதுவரை 50 கோடி 'டோஸ்' தடுப்பூசி வழங்கியுள்ளோம். மக்களின் வாழக்கை, வாழ்வாதாரம், வேலைவாய்ப்பை உறுதி செய்துள்ளோம்.

மருத்துவ வசதிகளை மேம்படுத்தியுள்ளோம். 'மேக் இன் இந்தியா' எனப்படும் உள்நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.நாட்டின் உள்கட்டமைப்பு, தொழில்துறை முன்னேற்றத்துக்கு காட்டப்படும் அதே முக்கியத்துவம், விவசாய துறைக்கும் வழங்கப்படுகிறது. விவசாயிகள் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

மத்திய பிரதேச அரசு மட்டும் 17 லட்சம் விவசாயிகளிடம் இருந்து 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கோதுமையை கொள்முதல் செய்துள்ளது.மிகவும் ஏழ்மையான மாநிலமாக இருந்த மத்திய பிரதேசம் மிகச் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரு கட்சியின் ஆட்சி உள்ளதால் இது சாத்தியமானது.இவ்வாறு அவர் பேசினார்.


மம்தா பானர்ஜி கடிதம்மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:மக்கள் நலனுக்கு விரோதமான மின்சார சட்ட திருத்த மசோதாவை பார்லி.,யில் தாக்கல் செய்ய கடந்தாண்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த மசோதாவை தாக்கல் செய்யக் கூடாது என கடந்த ஆண்டு கடிதம் எழுதியிருந்தேன்.அந்த மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மாநில மின் தொகுப்புகள், தேசிய தொகுப்பின் கீழ் கொண்டு வரும் இந்த மசோதா கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.இந்த மசோதா மக்கள் நலனுக்கு எதிரானது. இது தொடர்பாக முதலில் வெளிப்படையான பேச்சு நடத்த வேண்டும். அதன்பின் பார்லி.,யில் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagercoil Suresh - India,இந்தியா
08-ஆக-202121:01:35 IST Report Abuse
Nagercoil Suresh " 80 கோடி ஏழை மக்களுக்கு உணவு தானியங்கள், ரேஷன் வாயிலாக இலவசமாக வழங்கப்பட்டது" கொடுப்பதையும் கொடுத்துவிட்டு இதையெல்லாம் சொல்லி காட்டினால் மக்கள் வருத்தப்படுவார்கள்...
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
08-ஆக-202120:10:40 IST Report Abuse
srinivasan Cong needs KABASURA NEER. Frauds in Gandhi name. In 1977, on school entrance test, I answered- Gandhi is the father of Indira. I am still confused
Rate this:
Rajas - chennai,இந்தியா
08-ஆக-202120:51:30 IST Report Abuse
RajasIt shows your General Knowledge level. Even a child at the time, knew that Mrs.Indira was the daughter of Nehru. Many common man is named some great leaders. Will you think that all are the family members of our leaders....
Rate this:
Cancel
natesa -  ( Posted via: Dinamalar Android App )
08-ஆக-202118:26:17 IST Report Abuse
natesa reduce petrol
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X