பா.ஜ.,வுக்கே வெற்றி கிடைக்கும் பழைய பாசத்தில் உளறிய ராய் | Dinamalar

பா.ஜ.,வுக்கே வெற்றி கிடைக்கும் பழைய பாசத்தில் உளறிய ராய்

Added : ஆக 07, 2021 | கருத்துகள் (1)
Share
கோல்கட்டா:-''மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடந்தால், பா.ஜ.,வுக்கே வெற்றி கிடைக்கும். திரிபுராவிலும், பா.ஜ.,வே வெற்றி பெறும்,'' என, திரிணமுல் காங்.,கில் மீண்டும் சேர்ந்த மூத்த தலைவர் முகுல் ராய் வாய் தவறி பேசினார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது. திரிணமுல் காங்., கட்சி துவங்கியதில் இருந்து அதில் இருந்த மூத்த
 பா.ஜ.,வுக்கே வெற்றி கிடைக்கும் பழைய பாசத்தில் உளறிய ராய்

கோல்கட்டா:-''மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடந்தால், பா.ஜ.,வுக்கே வெற்றி கிடைக்கும். திரிபுராவிலும், பா.ஜ.,வே வெற்றி பெறும்,'' என, திரிணமுல் காங்.,கில் மீண்டும் சேர்ந்த மூத்த தலைவர் முகுல் ராய் வாய் தவறி பேசினார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது. திரிணமுல் காங்., கட்சி துவங்கியதில் இருந்து அதில் இருந்த மூத்த தலைவர் முகுல் ராய் 2018ல் பா.ஜ.,வுக்கு சென்றார்.மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் கட்சி மாறிய அவர், 2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு அதிக இடங்கள் கிடைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., சார்பில் வென்ற அவர் மீண்டும் திரிணமுல் காங்.,கில் இணைந்தார்.இந்நிலையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, ''மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில் இடைத்தேர்தல் நடந்தால் பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைக்கும்,'' என்றார். இதனால் நிருபர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக சுதாரித்த அவர், ''இடைத்தேர்தலில் திரிணமுல் காங்.,கே வெல்லும். திரிபுராவிலும் கால் பதிப்போம். பா.ஜ.,வுக்கு படுதோல்வி கிடைக்கும்,'' என்றார். ''கட்சி மாறியதால் முகுல் ராய் தன் செல்வாக்கை இழந்துள்ளார். அவர் மிகுந்த மனக் குழப்பத்தில் இருப்பது தெரிகிறது. ஆனாலும் பா.ஜ., வெல்லும் என்ற உண்மையை பேசியுள்ளார்,'' என, பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷமிக் பட்டாசார்யா கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X