சர்வதேச விண்வெளி வீரர்கள் விண்வெளியில் ஒலிம்பிக் விளையாட முயற்சி..!

Updated : ஆக 07, 2021 | Added : ஆக 07, 2021
Share
Advertisement
வாஷிங்டன்: நாளையுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைகின்றன. விண்வெளியில் சுற்றுலா செல்லும் திட்டத்தை அமெரிக்கா தொடர்ந்து ஆதரித்து வருகிறது. இதனாலேயே அமெரிக்க தொழிலதிபர் ஜெப் பெசோஸ் இதனை வணிக ரீதியாக செயல்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். இதேபோல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளையும் விண்வெளியில் நடத்தினால் எப்படி இருக்கும் என்று கேட்டால் பலரால்

வாஷிங்டன்: நாளையுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைகின்றன.



latest tamil news


விண்வெளியில் சுற்றுலா செல்லும் திட்டத்தை அமெரிக்கா தொடர்ந்து ஆதரித்து வருகிறது. இதனாலேயே அமெரிக்க தொழிலதிபர் ஜெப் பெசோஸ் இதனை வணிக ரீதியாக செயல்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். இதேபோல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளையும் விண்வெளியில் நடத்தினால் எப்படி இருக்கும் என்று கேட்டால் பலரால் நம்ப முடியாது. ஆனால் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இதனை செயல்படுத்தும் முனைப்பில் உள்ளது. இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.


நாசா விண்வெளி வீரர் சேன் கம்பரோ மற்றும் மேகன் மெக் ஆர்தர், அகிகோ அசிதே, தாமஸ் பெஸ்ட் கோட்ஸ் ஆகியோர் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கின் தனியார் விண்வெளி ஆய்வு மையமான ஸ்பெக்ஸ் விஞ்ஞானிகளுடன் இணைந்து ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்வெளி ஓடத்தில் விண்வெளியில் விளையாட்டு போட்டி முயற்சி ஒன்று நடைபெற்றுள்ளது. புவியீர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் பந்தை வைத்து விண்வெளி வீரர்கள் விளையாடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக இவர்கள் இரு அணிகளாக பிரிந்து விளையாடி உள்ளனர்.


latest tamil news



டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியைப் பாராட்டும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளது. இதுகுறித்து நாசா தனது டுவிட்டர் பக்கத்திலும் செய்தி வெளியிட்டுள்ளது. விண்வெளியில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றால் எவ்வாறு இருக்கும் என்று ட்வீட் செய்து, விண்வெளி வீரர்கள் புவியீர்ப்பு விசை இன்றி விளையாடும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

ஒரு பின்க்பாங் பாலை கையில் தொடாமல் இரு அணிகளும் விளையாடவேண்டும். இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா? இரண்டு அணி வீரர்களும் வாயில் காற்றை நிரப்பி ஊதி பந்தை நகர்த்த வேண்டும். விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு மூவாயிரத்திற்கும் மேற்பட்ட விண்வெளி ஆராய்ச்சிகளை 19 நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் நடத்தியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் ஸ்பேஸ் டிராகன் விண்வெளி ஓடம் மூலமாக ஏழு விண்வெளி வீரர்கள் ஆறுமாத விண்வெளி ஆராய்ச்சிக்காக விண்வெளிக்குச் சென்றனர்.இவர்கள் விண்வெளியில் நடத்திய இந்த விளையாட்டான விளையாட்டுப்போட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X