இந்தியாவுக்கு கூடுதல் தடுப்பூசி அமெரிக்க எம்.பி., கோரிக்கை

Added : ஆக 07, 2021
Share
Advertisement
வாஷிங்டன்:''இந்தியாவுக்கு அமெரிக்கா அளித்த 75 லட்சம் 'டோஸ்' கொரோனா தடுப்பூசி போதாது; கூடுதலாக வழங்க வேண்டும்,'' என, அந்நாட்டு எம்.பி.,யும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ராஜா கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். 'கொரோனா சவாலை சமாளிக்க இந்தியாவுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்' என, நேற்று முன்தினம் அமெரிக்க அதிபரின் வெள்ளைமாளிகை சார்பில்

வாஷிங்டன்:''இந்தியாவுக்கு அமெரிக்கா அளித்த 75 லட்சம் 'டோஸ்' கொரோனா தடுப்பூசி போதாது; கூடுதலாக வழங்க வேண்டும்,'' என, அந்நாட்டு எம்.பி.,யும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ராஜா கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

'கொரோனா சவாலை சமாளிக்க இந்தியாவுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்' என, நேற்று முன்தினம் அமெரிக்க அதிபரின் வெள்ளைமாளிகை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்க எம்.பி., ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளதாவது:

இந்தியாவுக்கு அமெரிக்கா 75 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்தை வழங்கியுள்ளது; இது போதாது. கூடுதலாக வழங்க வேண்டும். அமெரிக்கா உலகளவில் தடுப்பூசி திட்டத்திற்கு உதவுவதற்கான மசோதாவுக்கு 116 எம்.பி.,க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த மசோதாவை சட்டமாக்க வேண்டும். இதன் வாயிலாக உலகளவில் உருவாகும் உருமாறிய புதிய கொரோனா அச்சுறுத்தலை சமாளிக்க முடியும். இந்த சட்டத்தின் கீழ் தடுப்பூசி தயாரிப்பை அதிகரிப்பது, வினியோகிப்பது, தொற்று நோய் பரவலை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X