பொது செய்தி

தமிழ்நாடு

வானமாதேவி பேசும் பெருமான் கோவில் சொத்துக்கள் மீட்கப்படுமா?

Added : ஆக 07, 2021
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அடுத்த வானமாதேவி பேசும்பெருமான்(சிவன்) கோவிலுக்கு சொந்தமான 100 ஏக்கர் சொத்துக்களை தனி நபர்கள் பிடியிலிருந்து மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சேத்தியாத்தோப்பு அடுத்த வானமாதேவியில் உள்ள பேசும் பெருமான் கோவில் சோழர் காலத்தில் வீராணம் ஏரியை வெட்டும் போது கட்டப்பட்டுள்ளது.இந்த கோவிலின் சொத்துக் கணக்குகள்

சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அடுத்த வானமாதேவி பேசும்பெருமான்(சிவன்) கோவிலுக்கு சொந்தமான 100 ஏக்கர் சொத்துக்களை தனி நபர்கள் பிடியிலிருந்து மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேத்தியாத்தோப்பு அடுத்த வானமாதேவியில் உள்ள பேசும் பெருமான் கோவில் சோழர் காலத்தில் வீராணம் ஏரியை வெட்டும் போது கட்டப்பட்டுள்ளது.இந்த கோவிலின் சொத்துக் கணக்குகள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி கோவில் நிர்வாகத்திடம் உள்ளது.கோவிலுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலங்களுக்கு ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய குத்தகை தொகை தனி நபர்கள் செலுத்துவதில்லை.மேலும் கோவில் நிலங்களில் தனி நபர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்வது மட்டுமின்றி ஆக்கிரமித்து கட்டடங்கள், வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக வசிக்கின்றனர்.

பல ஆண்டுகளாக தனிநபர்களின் பிடியில் உள்ள கோவில் சொத்துக்களை மீட்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.கோவில் சொத்துக்களை மீட்பதில் அரசு ஆர்வம் காட்டி வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டி புராதன சின்னமாக இருந்த கோவிலில் மண்டபங்கள் சிற்பங்கள், சிலைகள், பிரம்மாண்ட யானை சிலையும்சேதமடைந்துள்ளன.பேசும் பெருமான் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை தனி நபர்களின் பிடியிலிருந்து மீட்டு கோவிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X