சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் அலுவலகம் முன் வியாபாரிகள் முற்றுகை

Added : ஆக 07, 2021
Share
Advertisement
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு இளமின் பொறியாளர் அலுவலகத்தை அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.மூங்கில்துறைப்பட்டில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதால் வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். பலமுறை மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.இந்நிலையில், நேற்று

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு இளமின் பொறியாளர் அலுவலகத்தை அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

மூங்கில்துறைப்பட்டில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதால் வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். பலமுறை மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.இந்நிலையில், நேற்று மூங்கில்துறைப்பட்டு அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் சீனுவாசன் தலைமையில் மூங்கில்துறைப்பட்டு இளமின் பொறியாளர் அலுவலகம் முன் வியாபாரிகள் முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. பின், இளமின் பொறியாளரிடம் புகார் மனுவினை கொடுத்தனர்.

மனுவில், இப்பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். அப்படி வழங்க தவறினால் விரைவில் வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X