சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

இந்த சான்றுகள் எப்போதும் அவசியம்!

Added : ஆக 07, 2021
Share
Advertisement
இந்த சான்றுகள் எப்போதும் அவசியம்!இறந்து போனவரின் எந்தெந்த நிதி சார்ந்த ஆவணங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கப்பட வேண்டும் என்பது குறித்து கூறும், நிதி ஆலோசகர் முகைதீன் ேஷக் தாவூது: பொதுவாக ஒருவர் இறந்து போனால், அவரது உடமைகளை அப்புறப்படுத்தி விடுவது தான் வழக்கமாக உள்ளது. ஆனாலும், சில ஆவணங்கள், அந்த நபர் இறந்த பிறகும், உயிர்ப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
சொல்கிறார்கள்


இந்த சான்றுகள் எப்போதும் அவசியம்!



இறந்து போனவரின் எந்தெந்த நிதி சார்ந்த ஆவணங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கப்பட வேண்டும் என்பது குறித்து கூறும், நிதி ஆலோசகர் முகைதீன் ேஷக் தாவூது: பொதுவாக ஒருவர் இறந்து போனால், அவரது உடமைகளை அப்புறப்படுத்தி விடுவது தான் வழக்கமாக உள்ளது. ஆனாலும், சில ஆவணங்கள், அந்த நபர் இறந்த பிறகும், உயிர்ப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
அவ்வாறு செய்வதால், வாரிசு சிக்கல் ஏற்படும் போது உதவும். சில நேரங்களில் வாரிசுகளுக்கு பணப்பலன்கள் கிடைக்கும். எனவே, கொஞ்ச காலத்திற்காவது சில ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.அந்த வகையில் அந்த நபரின் பென்ஷன் புத்தகத்தை, அந்த நபர் இறந்ததும் உடனே கிழித்து போட்டு விடாமல், பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அந்த நபர் இறந்து விட்டார் என்பதை பென்ஷன் வழங்கும் நிறுவனத்திற்கு சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். எனவே, அதை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். மேலும், குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கும் அந்த புத்தகம் உதவும்.இரண்டாவதாக, வாழும் போது அந்த நபர் பயன்படுத்தி வந்த வங்கி, ஏ.டி.எம்., கார்டை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

அந்த கார்டை பிறர் தவறுதலாக பயன்படுத்தி மோசடி செய்ய வாய்ப்பு உள்ளது. அதனால், இறந்த நபரின் கிரெடிட் கார்டு விவரங்களை, வங்கிக்கு தெரிவித்து, அந்த ரொக்க அட்டையை ரத்து செய்து பெற்றிருக்க வேண்டும். இல்லையேல், அந்த கடன் அட்டைக்கான பணத்தை நாம் கொடுக்க வேண்டிஇருக்கும்.அதுபோல, 'பான் கார்டு' எண் மற்றும் அட்டையை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். ஒரு நபர் இறந்து விட்டால் கூட, அவரின் வருமானம் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம். அந்த சூழலில் பான் கார்டு அவசியம் வேண்டும்.
மேலும், ஆதார் எண் மற்றும் அடையாள அட்டையையும், அவசரப்பட்டு ரத்து செய்யக் கூடாது. தற்போதைய நிலையில், அந்த அட்டைகளை ரத்து செய்ய முடியாது. அதுபோல, இறப்பை ஆதார் அடையாள அட்டையில் பதிவு செய்வதும் முடியாததாக உள்ளது. மேலும் பாதுகாப்பை உறுதி செய்ய இறந்த நபரின் ஆதார் எண்ணுடன் தொடர்புடைய அவர் முகவரி, முக அடையாளங்கள் போன்றவற்றை பிறர் பயன்படுத்த முடியாத அளவுக்கு 'லாக்' செய்து விட வேண்டும்.
வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் போன்றவற்றில் உள்ள எண்ணை பிறர் பயன்படுத்தி முறைகேடு செய்ய வாய்ப்பு உள்ளது என்பதால், அந்த அடையாள அட்டைகளை ரத்து செய்ய முறையான அதிகாரிகளிடம் கோரலாம்.
ஆனால், அவ்வாறு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால், எதிர்காலத்தில் தேவைப்படும் என்ற ரீதியில் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.எனவே, இறந்தவரின் இறப்புச் சான்றுடன் மேற்கண்ட சான்றுகளையும் நீண்ட காலத்திற்கு வைத்திருக்க வேண்டும்!




வீட்டிலிருந்தே சம்பாதிக்கபல வழிகள்!



கொரோனா காரணமாக பெரும்பாலானோர் வீட்டில் இருந்து வேலை பார்க்கின்றனர் அல்லது வேலைக்கு போகாதவர்கள் வீட்டிலேயே இருந்து குண்டாகி போகின்றனர். அதை தவிர்க்க, வீட்டில் இருந்தபடியே என்ன செய்யலாம் என ஆலோசனை வழங்குகிறார் எழுத்தாளர் கவிதா:
காலை 10:00 முதல், மாலை 6:00 மணி வரையிலான வேலைகள் இனி வேலைக்கு ஆகாது என்ற நிலைமைக்கு வந்துள்ளோம். திறமையும், புத்திசாலித்தனமும் இருந்தால் வீட்டில் இருந்தபடியே கை நிறைய சம்பாதிக்கலாம்.

நீங்கள், கைவேலைகள் அறிந்தவராக இருந்தால் கவலையில்லை. ஓவியம் வரைவது, விதவிதமான கலைப் பொருட்கள் தயாரிப்பது மற்றும் பரிசுப் பொருட்கள் தயாரிப்பது போன்றவற்றில் ஆர்வம் உள்ளவராக இருந்தால், வீட்டில் இருந்தபடியே போதுமான அளவு
சம்பாதிக்கலாம்.அதுபோல, வீணாகும் பொருளைக் கூட விதவிதமான கலைப் பொருளாக ஆக்கும் திறன் படைத்தவராக இருந்தால், உங்களுக்கு பணக் கஷ்டமே வராது. சாதாரண ஆடையைக் கூட உங்கள் கைவேலைகளால் கவர்ச்சியாக மாற்றி, சமூக வலைதளங்களில் பக்கங்களைத் துவங்கி, அதில் உங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தி, காலா காலத்திற்கும் காசு பார்க்கலாம்.குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளை ஈர்க்கும் வகையிலான பொருட்களை தயாரித்து, அதற்கான சமூக வலைதள பக்கங்களில் அதை 'வீடியோ' அல்லது படங்களாக காட்டி விளம்பரம் செய்யும் போது, அந்தப் பொருட்களுக்கு வாடிக்கையாளர்கள் குவிய வாய்ப்பு உள்ளது.
இது 'ஆன்லைன்' காலம். பள்ளி, கல்லுாரிக்கு மாணவர்கள் சென்று இரண்டாண்டுகள் ஆகப் போகின்றன. எனவே, இந்த ஆன்லைன் காலத்தை உங்கள் வருமானத்திற்கான காலமாக மாற்றிக் கொள்ளலாம். ஆம், ஆன்லைனில் 'டியூஷன்' எடுப்பது, பாடம் சொல்லிக் கொடுப்பது போன்றவற்றை செய்யலாம்.இதற்கு நீண்ட நேரம் செலவிட வேண்டும் என்பதில்லை. உங்கள் ஓய்வு நேரங்களில், பாடம் தொடர்பான வீடியோக்களை தயாரித்து, அவற்றை தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்கி பணம் சம்பாதிக்கலாம்.குறிப்பாக, மொழிகள், ஆங்கில இலக்கணம், யோகா, எளிய முறையில் ஓவியம் வரைதல் போன்றவற்றை ஆன்லைன் மூலமே கற்றுக் கொடுக்கலாம்.

மேலும், வீட்டில் இருந்தபடியே வருமானம் பார்க்க, இணைய தள பக்கங்கள், இணையதளங்கள் போன்றவற்றிற்கு, 'கன்டென்ட் ரைட்டிங்' எனப்படும் கட்டுரைகளை எழுதி காசு பார்க்கலாம்.அத்துடன் 'அனிமேஷன், வெப்சைட் கிரியேஷன் போன்ற டெக்னிக்கல்' வேலைகளையும் செய்து, பணம் பார்க்க முடியும். அதுபோல, இணையம் மூலம் கட்டுரைகளில் பிழை திருத்துவது, 'டைப்' செய்வது என்பன போன்றவற்றையும் செய்யலாம்.
எல்லாவற்றையும் விட, ருசியாக சமைக்கத் தெரிந்தால் அதை விளம்பரப்படுத்தி போதுமான அளவில் 'ஆர்டர்' பெற்று, நல்ல லாபம் சம்பாதிக்கலாம்!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X