பொது செய்தி

தமிழ்நாடு

நுாலகத்தில் படத்திறப்பு நிகழ்ச்சி

Added : ஆக 07, 2021
Share
Advertisement
கடலுார், : கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில் இணைய வழி புத்தகங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அய்யப்பன் எம்.எல்.ஏ., பேசினார்.கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில் பத்மபூஷன் விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் படத்தை அய்யப்பன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். நுாலகத்திற்கு புதிய புத்தகங்களை வழங்கி பேசியதாவது: உலகளவில் கல்வி வல்லுனர்கள், கவிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள்

கடலுார், : கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில் இணைய வழி புத்தகங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அய்யப்பன் எம்.எல்.ஏ., பேசினார்.

கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில் பத்மபூஷன் விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் படத்தை அய்யப்பன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். நுாலகத்திற்கு புதிய புத்தகங்களை வழங்கி பேசியதாவது: உலகளவில் கல்வி வல்லுனர்கள், கவிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் போற்றக் கூடிய எழுந்தாளராக ஜெயகாந்தன் விளங்குகிறார். மாவட்ட மைய நுாலகத்தில் இணைய வழி புத்தகங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ, மாணவியர் பயன்படுத்தி பொது அறிவை வளர்த்து போட்டித் தேர்வுக்கு தயாராக வேண்டும்.

நுாலகத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுப்பேன், என்றார்.மாவட்ட நுாலக அலுவலர் பால சரஸ்வதி, முதல் நிலை நுாலகர் பாப்பாத்தி, இரண்டாம் நிலை நுாலகர் சந்திரபாபு, தி.மு.க., நகர செயலர் ராஜா, ரோட்டரி சங்க உதவி ஆளுனர் பூங்குன்றன், அரிமா சங்கத் தலைவர் தினகரன், டிப்பர் லாரி சங்கத் தலைவர் பிரகாஷ், கிருஷ்ணசாமி பள்ளி முதல்வர் நடராஜன், சன் பிரைட் பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X