பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய கண்காட்சி

Added : ஆக 07, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : திருக்கோவிலுாரில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் நடந்த மாவட்ட அளவிலான விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.திருக்கோவிலுார் தனியார் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், வேளாண் கல்லுாரி

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலுாரில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் நடந்த மாவட்ட அளவிலான விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

திருக்கோவிலுார் தனியார் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், வேளாண் கல்லுாரி முதல்வர் முத்துகிருஷ்ணன், வேளாண் விஞ்ஞானிகள் தினகரன், பாபு முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு, பட்டு வளர்ச்சி, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம் உட்பட பல்வேறு துறை சார்பில் அமைக்கப்பட்ட விவசாய கண்காட்சியினை கலெக்டர் துவக்கி வைத்து பேசினார்.நிகழ்ச்சியில், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துணை இயக்குனர் உலகம்மை முருககனி, வேளாண்மை உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு அன்பழகன், வேளாண் உதவி இயக்குனர் ராமன் உட்பட அரசு அலுவலர்கள் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X