பொது செய்தி

தமிழ்நாடு

ஆடி அமாவாசையில் திதி தர்ப்பணம் கொடுக்க தடை

Added : ஆக 07, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்--ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடி அமாவாசையான இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், சேதுக்கரை உள்ளிட்ட கடற்கரையில் திதி, தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி., கார்த்திக் அறிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பது:இன்று(ஆக.8) ஆடி அமாவாைசையை முன்னிட்டு ராமேஸ்வரம், திருப்புல்லாணி அருகே சேதுக்கரை, தேவிப்பட்டினம் நவபாஷாணம், மாரியூர், மூக்கையூர் உள்ளிட்ட

ராமநாதபுரம்--ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடி அமாவாசையான இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், சேதுக்கரை உள்ளிட்ட கடற்கரையில் திதி, தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி., கார்த்திக் அறிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பது:இன்று(ஆக.8) ஆடி அமாவாைசையை முன்னிட்டு ராமேஸ்வரம், திருப்புல்லாணி அருகே சேதுக்கரை, தேவிப்பட்டினம் நவபாஷாணம், மாரியூர், மூக்கையூர் உள்ளிட்ட முக்கிய கடற்கரை புண்ணிய தலங்களில் வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்வது வழக்கம்.தற்போது கொரோனா வைரஸ் பரவலால் அரசு உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் இதற்கு தடை விதித்துள்ளது. எனவே ஒரே இடத்தில்அதிக மக்கள் கூடுவதால் நோய் தொற்று அபாயம்இருப்பதால் ஆடி அமாவாசை நாளில் பொதுமக்கள் யாரும் திதி, தர்ப்பணம் உள்ளிட்ட சடங்குகள் செய்ய தடை விதிக்கப்படுகிறது.பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X