பொது செய்தி

தமிழ்நாடு

தெற்கு மாவட்ட காங்., செயல்வீரர்கள் கூட்டம்

Added : ஆக 07, 2021
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் காங்கிரஸ் கமிட்டி தெற்கு மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள் எதிர்கால திட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.சேத்தியாத்தோப்பு விஜயகணேசர் மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு, காங்., தெற்கு மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.மாநில துணைத் தலைவர் மணிரத்தினம், மாநில செயலாளர் சித்தார்த்தன், மாவட்ட பொருளாளர் வேங்கடகிரி, டாக்டர்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் காங்கிரஸ் கமிட்டி தெற்கு மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள் எதிர்கால திட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

சேத்தியாத்தோப்பு விஜயகணேசர் மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு, காங்., தெற்கு மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.மாநில துணைத் தலைவர் மணிரத்தினம், மாநில செயலாளர் சித்தார்த்தன், மாவட்ட பொருளாளர் வேங்கடகிரி, டாக்டர் செந்தில்வேலன், மாவட்ட துணைத் தலைவர் விநாயகம், வைத்தியநாதசாமி, முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். புவனகிரி வட்டாரத் தலைவர் ஜெயசீலன், சேத்தியாத்தோப்பு நகரத்தலைவர் மதியழகன் வரவேற்றனர்.

கூட்டத்தில், காங்., கமிட்டி மேலிட பார்வையாளர் லட்சுமி ராமச்சந்திரன் பங்கேற்று கட்சியின் எதிர்காலத்திட்டங்கள், கட்டுமானங்கள், வலுப்படுத்துவதற்கான செயல்கள், தொண்டர்கள், உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து ஆலோசித்தார். கட்சியை வலுப்படுத்த இளைஞர்களை அதிகளவில் சேர்ப்பது, விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசிற்கு கோரிக்கை வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

புவனகிரி கிழக்கு வட்டாரத்தலைவர் நாகராஜன், கீரப்பாளையம் வட்டாரத்தலைவர்கள் செழியன், பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் வட்டாரத்தலைவர்கள் அரிகிருஷ்ணன், சீனுராஜேந்திரன், தொகுதி செய்தி தொடர்பாளர் சம்பத், பரங்கிப்பேட்டை பக்கிரிசாமி, கம்மாபுரம் பழனிவேல், கங்கைகொண்டான் நகர தலைவர் தெய்வசிகாமணி, நகர பொருளாளர் சீனிவாசன், முன்னாள் நகர செயலாளர் கிளாங்காடு சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X