பொது செய்தி

தமிழ்நாடு

மஞ்சனீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் ரத்து

Added : ஆக 07, 2021
Share
Advertisement
விழுப்புரம் : கொரோனா தொற்று பரவலையொட்டி, கீழ்புத்துப்பட்டு மஞ்சனீஸ்வரர் கோவிலில் நாளை பக்தர்களுக்கான சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:ஊரடங்கு காலத்தில் கோவில்களில் நடைபெறும் விழா, ஊர்வலம், குடமுழுக்கு நடத்தக்கூடாது. தினந்தோறும் நடைபெறும் பூஜை கோவில் அலுவலர்களால் மட்டும் நடத்தவும், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மட்டும்

விழுப்புரம் : கொரோனா தொற்று பரவலையொட்டி, கீழ்புத்துப்பட்டு மஞ்சனீஸ்வரர் கோவிலில் நாளை பக்தர்களுக்கான சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:ஊரடங்கு காலத்தில் கோவில்களில் நடைபெறும் விழா, ஊர்வலம், குடமுழுக்கு நடத்தக்கூடாது. தினந்தோறும் நடைபெறும் பூஜை கோவில் அலுவலர்களால் மட்டும் நடத்தவும், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.நாளை 9ம் தேதி, ஆடி 4வது திங்களையொட்டி, மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் உள்ள மஞ்சனீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள், பொதுமக்கள் அதிகளவில் கூடுவர்.

இதனால் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.எனவே, கோவிலில் நாளை 9ம் தேதி பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. ஆகமவிதிப்படி சுவாமி அலங்காரம், பூஜை ஆகியவை அர்ச்சகர்கள், கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் மூலம் நடத்தி கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X