ஆபாச வீடியோ வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆபாச வீடியோ வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல்

Added : ஆக 07, 2021
Share
விழுப்புரம் : விழுப்புரத்தில் ஆபாச வீடியோவை சமூக வலை தளங்களில் விடுவதாக கல்லுாரி மாணவிக்கு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரத்தைச் சேர்ந்தவர் 18 வயது பெண். கல்லுாரி மாணவி. கடந்த 5ம் தேதி இவரது மொபைல் போனுக்கு ஆபாச பெண்ணின் உடலோடு கல்லுாரி மாணவியின் முகத்தை மார்பிங் செய்து இணைத்த வீடியோ, வாட்ஸ் ஆப் மூலம் வந்துள்ளது.மேலும், அந்த எண்ணில் இருந்து

விழுப்புரம் : விழுப்புரத்தில் ஆபாச வீடியோவை சமூக வலை தளங்களில் விடுவதாக கல்லுாரி மாணவிக்கு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் 18 வயது பெண். கல்லுாரி மாணவி. கடந்த 5ம் தேதி இவரது மொபைல் போனுக்கு ஆபாச பெண்ணின் உடலோடு கல்லுாரி மாணவியின் முகத்தை மார்பிங் செய்து இணைத்த வீடியோ, வாட்ஸ் ஆப் மூலம் வந்துள்ளது.மேலும், அந்த எண்ணில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர், 'உன்னுடைய புகைப்படங்களை அனுப்ப வேண்டும். இல்லையேல் அந்த ஆபாச வீடியோவை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் வெளியிடுவேன்' என அந்த பெண்ணிடம் பேசி மிரட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் தகவல் தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்துதல் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து அந்த நபரை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X