பொது செய்தி

தமிழ்நாடு

அடிப்படை வசதி நிறைவேற்றப்படும்; அய்யப்பன் எம்.எல்.ஏ., உறுதி

Added : ஆக 07, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் தொகுதியில் சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என அய்யப்பன் எம்.எல்.ஏ., கூறினார்.கடலுார் ஒன்றியம், செல்லஞ்சேரி ஊராட்சியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் தடுப்பூசி முகாம் நடந்தது. ஊராட்சித் தலைவர் செல்வராசு தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் சக்தி, அசோக்பாபு முன்னிலை வகித்தனர். அய்யப்பன் எம்.எல்.ஏ.,

கடலுார் : கடலுார் தொகுதியில் சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என அய்யப்பன் எம்.எல்.ஏ., கூறினார்.

கடலுார் ஒன்றியம், செல்லஞ்சேரி ஊராட்சியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் தடுப்பூசி முகாம் நடந்தது. ஊராட்சித் தலைவர் செல்வராசு தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் சக்தி, அசோக்பாபு முன்னிலை வகித்தனர். அய்யப்பன் எம்.எல்.ஏ., விழிப்புணர்வு நிகழ்ச்சியையும், தடுப்பூசி முகாமையும் துவக்கி வைத்தார். பின்னர், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில், 'முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.

முதல்வர் உத்தரவின்படி கடலுார் தொகுதியில் பல இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. கடலுார் தொகுதியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்' என்றார். நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X