பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலகத்தில் பெண்களை சோதனை செய்ய தனி இடம் தயார்

Added : ஆக 07, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பெண்களை தனியே சோதனை செய்ய போலீசார் துணியால் அறைபோல் தடுத்து மறைப்பு ஏற்படுத்தியுள்ளனர்.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு, மாவட்டம் முழுவதுமிருந்தும் புகார் மற்றும் கோரிக்கை மனு அளிக்க வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் மண்ணெண்ணெய், பூச்சி மருந்து உள்ளிட்டவைகளைக் கொண்டு வந்து தற்கொலை மிரட்டல்

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பெண்களை தனியே சோதனை செய்ய போலீசார் துணியால் அறைபோல் தடுத்து மறைப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு, மாவட்டம் முழுவதுமிருந்தும் புகார் மற்றும் கோரிக்கை மனு அளிக்க வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் மண்ணெண்ணெய், பூச்சி மருந்து உள்ளிட்டவைகளைக் கொண்டு வந்து தற்கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.போலீசார் பாதுகாப்பையும் மீறி இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. பெரும்பாலும் பெண்கள் மூலம் மண்ணெண்ணெய் மறைத்து எடுத்து வருவது தெரிய வந்துள்ளது.

இதனால், கலெக்டர் நுழைவு வாயில் முன்பு பெண்களை, பெண் போலீசார் சோதனை செய்வதற்காக, கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே உள்ள மரத்தில் துணி மூலம் கூண்டு போல் தற்காலிகமாக மறைப்பு ஏற்படுத்தியுள்ளனர். இனி மனு கொடுக்க வரும் பெண்கள் அந்த தனி அறையில் சோதனை செய்யப்படுவார்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X