பொது செய்தி

தமிழ்நாடு

நுண்ணீர் பாசன திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு

Added : ஆக 07, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு பாசனம் அமைத்து பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கம்மாபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் புவனேஸ்வரி செய்திக்குறிப்பு:கம்மாபுரம் வட்டாரத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில், சொட்டுநீர் மற்றும் தெளிப்பு பாசனம் அமைக்க 325 எக்ேடர் பரப்புக்கு ரூ. 2 கோடி

விருத்தாசலம் : பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு பாசனம் அமைத்து பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கம்மாபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் புவனேஸ்வரி செய்திக்குறிப்பு:கம்மாபுரம் வட்டாரத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில், சொட்டுநீர் மற்றும் தெளிப்பு பாசனம் அமைக்க 325 எக்ேடர் பரப்புக்கு ரூ. 2 கோடி இலக்கீடு வரப்பெற்றுள்ளது. சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

மேலும், துணைநிலை நீர் மேலாண்மை செயல்பாடுகள் மூலம் டீசல் பம்புசெட், மின் மோட்டார் பம்புசெட் நிறுவ ரூ. 15 ஆயிரம், நிலத்திற்கு பாசன நீரை கொண்டு செல்ல நீர்ப்பாசன குழாய்கள் அமைக்க எக்ேடருக்கு ரூ. 10 ஆயிரம்,பாதுகாப்பு வேலியுடன் தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க ஒரு கன மீட்டருக்கு ரூ. 350அல்லது ரூ. 40 ஆயிரத்திற்கு மிகாமல் மானியம் வழங்கப்படுகிறது. ஸ்ரீமுஷ்ணம் பிர்க்காவில் ஆழ்துளை கிணறு அமைக்க ரூ. 25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் துணை தோட்டக்கலை அலுவலர் இன்பம் 94430-92186, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் அருள் 96299-85463, 99762-27905, ராஜசேகரன்86672-78234, மணிகண்டன் 90036-36025 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X