பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல் ஓட்டுச்சாவடி பட்டியல்

Added : ஆக 07, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் உள்ளாட்சித் தேர்தல் வரைவு ஓட்டுச்சாவடிப் பட்டியல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கருத்துகேட்புக் கூட்டம் நடந்தது.கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். அமைச்சர் பொன்முடி முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், 'வரைவு ஓட்டுச்சாவடிப் பட்டியல்கள் கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்டது. அவை,

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் உள்ளாட்சித் தேர்தல் வரைவு ஓட்டுச்சாவடிப் பட்டியல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கருத்துகேட்புக் கூட்டம் நடந்தது.

கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். அமைச்சர் பொன்முடி முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், 'வரைவு ஓட்டுச்சாவடிப் பட்டியல்கள் கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்டது. அவை, கலெக்டர் அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் அனைத்து கிராம ஊராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

ஓட்டுச்சாவடிகள் தொடர்பான கூடுதல் கருத்துக்கள் அல்லது கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின் நாளை 9ம் தேதிக்குள் பி.டி.ஓ.,விடம் எழுத்து மூலம் தெரிவிக்கலாம். வரும் 11ம் தேதி இறுதி பட்டியல்கள் வெளியிடப்படும்' என்றார்.கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், மணிக்கண்ணன், புகழேந்தி, டி.ஆர்.ஓ., விஜயபாபு, திட்ட இயக்குனர் மணி, கலெக்டர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) குமாரி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் மஞ்சுளா, தமிழ்நாடு சர்க்கரை ஆலைகள் இணைய தலைவர் ராஜசேகர், தி.மு.க., மாவட்ட பொருளாளர் கென்னடி, பொறுப்புக்குழு உறுப்பினர் ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய துணைச் சேர்மன் முரளி, பா.ஜ., மாவட்ட தலைவர் பாலசுந்தரம் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X