பொது செய்தி

தமிழ்நாடு

சின்னுார் கிராமத்தில் புதிய சாலை அமைக்குமிடம்: எம்.எல்.ஏ., பார்வை

Added : ஆக 07, 2021
Share
Advertisement
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே மீனவ கிராமத்திற்கு புதியதாக சாலை அமைக்குமிடத்தை பாண்டியன் எம்.எல்.ஏ., பார்வையிட்டார்.பரங்கிப்பேட்டை அடுத்த வடக்கு சின்னுார் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் முகத்துவாரம் வழியாக கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இதனால், அவர்களுக்கு காலவிரையமும், பொருட்செலவும் ஏற்பட்டு வருகிறது. கிராமத்தில்

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே மீனவ கிராமத்திற்கு புதியதாக சாலை அமைக்குமிடத்தை பாண்டியன் எம்.எல்.ஏ., பார்வையிட்டார்.

பரங்கிப்பேட்டை அடுத்த வடக்கு சின்னுார் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் முகத்துவாரம் வழியாக கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இதனால், அவர்களுக்கு காலவிரையமும், பொருட்செலவும் ஏற்பட்டு வருகிறது. கிராமத்தில் இருந்து வனத்துறை இடத்தின் வழியாக நேரிடையாக கடற்கரைக்கு செல்ல, புதியதாக சாலை அமைத்துத்தர கிராம மக்கள் பாண்டியன் எம்.எல்.ஏ., விடம் கோரிக்கை வைத்தனர்.

அந்த இடத்தை பாண்டியன் எம்.எல்.ஏ., பார்வையிட்டு, நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம், உறுதியளித்தார். ஒன்றிய செயலர் ராசாங்கம், மாவட்ட மீனவரணி செயலர் வீராசாமி, கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த்,பேராசிரியர் ரங்கசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் ரங்கம்மாள், சுதாகர், மீனவரணி சிவக்குமார், சிவராஜ், கிராம தலைவர் முருகன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X