போலீஸ் செய்தி:  சிவகங்கை| Dinamalar

போலீஸ் செய்தி:  சிவகங்கை

Added : ஆக 07, 2021
Share
மாணவி பலாத்காரம்சிவகங்கை: சிவகங்கை அருகே குமாரபட்டி சுந்தர்ராஜன் மகன் பாரத்லால் 29. இவர் காமராஜர் காலனியில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரிடம் போட்டோ எடுப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த 20 வயது சட்டக்கல்லுாரி மாணவி கடந்த 3 மாதங்களுக்கு முன் சென்றுஉள்ளார்.அப்போது இம்மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஸ்டூடியோவில் வைத்தே கற்பழித்துள்ளார். தொடர்ந்து அவரை

மாணவி பலாத்காரம்சிவகங்கை: சிவகங்கை அருகே குமாரபட்டி சுந்தர்ராஜன் மகன் பாரத்லால் 29. இவர் காமராஜர் காலனியில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரிடம் போட்டோ எடுப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த 20 வயது சட்டக்கல்லுாரி மாணவி கடந்த 3 மாதங்களுக்கு முன் சென்றுஉள்ளார்.அப்போது இம்மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஸ்டூடியோவில் வைத்தே கற்பழித்துள்ளார். தொடர்ந்து அவரை அலைபேசியில் போட்டோ எடுத்து அடிக்கடி அதை காட்டி மிரட்டி பலமுறை கற்பழித்துள்ளார். தற்போது மாணவி 2 மாத கர்ப்பிணியாக உள்ளார். சிவகங்கை மகளிர் ஸ்டேஷன்இன்ஸ்பெக்டர் முத்துமீனாட்சி தலைமறைவான பாரத்லாலை தேடி வருகின்றார்.கந்துவட்டி வழக்குகாளையார்கோவில்: திருநகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி கலைமதி 37. இவர் திருநகரில் வசிக்கும் உறவினர்கள் கண்ணன் மனைவி சுதா 26, மற்றும் வனிதா 35, கலா 37 ஆகிய மூவரிடமும் கடந்த ஒரு ஆண்டிற்கு முன் தனித்தனியாக ரூ.1 லட்சம் வரை வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். கடனுக்கான வட்டியை அசலுடன் கலைமதி திரும்பி கொடுத்துவிட்டார். ஆனால் மூவரும் இன்னும் அசல், வட்டி தர வேண்டும் எனக்கேட்டு மிரட்டியுள்ளனர். இன்ஸ்பெக்டர் சரவணன் கந்துவட்டி சட்டப்படி மூன்று பேர் மீதும் வழக்கு பதிந்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X