சிவகங்கையில் 25 மி.மீ., மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில் 25 மி.மீ., மழை

Added : ஆக 07, 2021
Share
சிவகங்கை,--மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக சிவகங்கையில் 25 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.ஆடிப்பட்டத்தில் தேடி விதைக்க போதிய மழையின்றி விவசாயிகள் தவித்து வந்தனர். ஆடி பெருக்கு வரை மழையின்றி வானம் பார்த்த பூமியான சிவகங்கை மாவட்ட விவசாயிகள் மானாவாரியாக நிலக்கடலை, பருத்தி மற்றும் தானிய பயிர்களை நடவு செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.ஆங்காங்கே விவசாயிகள்

சிவகங்கை,--மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக சிவகங்கையில் 25 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.ஆடிப்பட்டத்தில் தேடி விதைக்க போதிய மழையின்றி விவசாயிகள் தவித்து வந்தனர். ஆடி பெருக்கு வரை மழையின்றி வானம் பார்த்த பூமியான சிவகங்கை மாவட்ட விவசாயிகள் மானாவாரியாக நிலக்கடலை, பருத்தி மற்றும் தானிய பயிர்களை நடவு செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.ஆங்காங்கே விவசாயிகள் தங்கள் நிலங்களில் கோடை உழவு பணிகளை செய்து வைத்திருந்தனர். நேற்று முன்தினம் மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்தது. குறிப்பாக சிவகங்கை, திருப்புத்துார், சிங்கம்புணரி ஆகிய மூன்று தாலுகாவிலும் நல்ல மழை பெய்துள்ளது. மற்ற தாலுகாக்களில் மழை பெய்யவில்லை. ஆடிபட்டத்தில் தேடி விதைக்க சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தயாராகி விட்டனர். இருப்பினும் இன்னும் மழை பெய்து கண்மாய்களில் தண்ணீர் தேங்கினால்மட்டுமே விவசாயத்தை தொடரமுடியும் என்ற நிலையில் விவசாயிகள் தவிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X