பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய கைத்தறி கண்காட்சி; கலெக்டர் துவக்கி வைத்தார்

Added : ஆக 07, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுாரில் 7வது தேசிய கைத்தறி தினவிழாவையொட்டி, கைத்தறி கண்காட்சியை கலெக்டர் பாலசுப்ரமணியம் துவக்கி வைத்தார்.கடலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் துவங்கிய கண்காட்சியில், கைத்தறி நெசவாளர்கள், கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யும் பட்டு புடவைகள், வேங்கடகிரி பருத்தி சேலைகள், கொசு வலைகள், சட்டைத் துணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.பின், நெசவாளர் முதியோர்

கடலுார் : கடலுாரில் 7வது தேசிய கைத்தறி தினவிழாவையொட்டி, கைத்தறி கண்காட்சியை கலெக்டர் பாலசுப்ரமணியம் துவக்கி வைத்தார்.

கடலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் துவங்கிய கண்காட்சியில், கைத்தறி நெசவாளர்கள், கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யும் பட்டு புடவைகள், வேங்கடகிரி பருத்தி சேலைகள், கொசு வலைகள், சட்டைத் துணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.பின், நெசவாளர் முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் 4 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறும் ஆணை, நெசவாளர் முத்ரா கடன் திட்டத்தில் 5 பயனாளிகளுக்கு கடனுதவி ஆணை, கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு தறி உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

கூடுதல் கலெக்டர் பவன்குமார் ஜி கிரியப்பனவர், மாவட்டஆய்வு குழு அலுவலர் ஜெகதீஸ்வரன், கைத்தறி மற்றும் துணிநுால் உதவி இயக்குனர் வெற்றிவேல் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X