சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 கைகளும் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்ற பெண் சாவு

Added : ஆக 07, 2021
Share
Advertisement
நெய்வேலி:என்.எல்.சி., இன்ஜினியர், மனைவியின் இரண்டு கைகளையும் வெட்டி துண்டாக்கி விட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், சிகிச்சை பெற்று வந்த மனைவியும் இறந்தார். கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்த முதனை கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீஉத்தண்டராயன், 47; என்.எல்சி., முதல் சுரங்கத்தில் இன்ஜினியர். இவரது மனைவி ஜெயசித்ரா, 45. மூன்று மகன்கள் உள்ளனர்.கடந்த 2ம் தேதி மதியம் கணவன்,
 2 கைகளும் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்ற பெண் சாவு

நெய்வேலி:என்.எல்.சி., இன்ஜினியர், மனைவியின் இரண்டு கைகளையும் வெட்டி துண்டாக்கி விட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், சிகிச்சை பெற்று வந்த மனைவியும் இறந்தார்.

கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்த முதனை கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீஉத்தண்டராயன், 47; என்.எல்சி., முதல் சுரங்கத்தில் இன்ஜினியர். இவரது மனைவி ஜெயசித்ரா, 45. மூன்று மகன்கள் உள்ளனர்.கடந்த 2ம் தேதி மதியம் கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில், ஜெயசித்ராவின் இரண்டு கைகளையும் ஸ்ரீஉத்தண்டராயன் கத்தியால் வெட்டினார்.இதில் இரண்டு கைகளும் துண்டாகி விழுந்தன. இதனால் பயந்த ஸ்ரீ உத்தண்டராயன் துாக்கு போட்டு, தற்கொலை செய்து கொண்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஜெயசித்ரா சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு இரண்டு கைகளும், அறுவை சிகிச்சை செய்து இணைக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும் சிகிச்சை பலனின்றி, நேற்று காலை 11:30 மணியளவில் ஜெயசித்ரா இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X