பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் பா.ம.க.,வினர் திரண்டதால் பரபரப்பு

Added : ஆக 07, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் அரசு போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளர் அலுவலகத்தில் பா.ம.க., வினர் மனு அளிக்க திரண்டதால் முன்னெச்சரிக்கை நடடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டனர். கடலுாரில் அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் உள்ளது. இங்கு, பா.ம.க., மாநில துணைப் பொதுச் செயலர்கள் முத்துக்கிருஷ்ணன், அசோக்குமார் தலைமையில் மாவட்ட செயலர்கள் கோபிநாத், சசிக்குமார், ரவிச்சந்திரன்,

கடலுார் : கடலுார் அரசு போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளர் அலுவலகத்தில் பா.ம.க., வினர் மனு அளிக்க திரண்டதால் முன்னெச்சரிக்கை நடடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டனர்.

கடலுாரில் அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் உள்ளது. இங்கு, பா.ம.க., மாநில துணைப் பொதுச் செயலர்கள் முத்துக்கிருஷ்ணன், அசோக்குமார் தலைமையில் மாவட்ட செயலர்கள் கோபிநாத், சசிக்குமார், ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய சேர்மன் ரவிச்சந்திரன், பாட்டாளி தொழிற்சங்க மண்டல தலைவர் சக்திவேல் உட்பட 40க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் 1:30 மணிக்கு திரண்டனர். பின், மண்டல பொது மேலாளர் மாரியப்பனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

சிதம்பரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பணி புரியும் பாட்டாளி தொழிற் சங்க நிர்வாகிகளுக்கு சரிவர பணி ஒதுக்கீடு செய்வதில்லை. இதனை தட்டிக் கேட்ட டிரைவர் ராஜதுரை, போர்மேன் வீரமணி, மெக்கானிக் தாமரைச் செல்வன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மனு அளித்து விட்டு 3:00 மணிக்கு கலைந்துச் சென்றனர். பா.ம.க., மற்றும் பட்டாளி தொழிற்சங்க நிர்வாகிகள் திரண்டதால் மண்டல பொது மேலாளர் அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X