கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு

Added : ஆக 07, 2021
Share
சிவகங்கை-தி.மு.க., முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.சிவகங்கையில் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். மாவட்ட துணை செயலாளர்கள் மணிமுத்து, சேங்கைமாறன், நகர் செயலாளர் துரைஆனந்த் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசன், ஒன்றியசெயலாளர்கள்

சிவகங்கை-தி.மு.க., முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.சிவகங்கையில் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். மாவட்ட துணை செயலாளர்கள் மணிமுத்து, சேங்கைமாறன், நகர் செயலாளர் துரைஆனந்த் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசன், ஒன்றியசெயலாளர்கள் முத்துராமலிங்கம், ஜெயராமன்,சிவகங்கை ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலசந்தர், மாணவரணி துணை அமைப்பாளர் ராஜஅமுதன், முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன், மாவட்ட பிரதிநிதி ரமேஷ், நகர் இளைஞரணி அயூப்கான், நகர மகளிரணி மஞ்சுளா, மீனாட்சி தனசேகரன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.இளையான்குடி: இளையான்குடி அருகே சிறுபாலை, செந்தமிழ்நகர், தாயமங்கலம் உள்ளிட்ட இடங்களில் மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி,முன்னாள் எம்.எல்.ஏ.,மதியரசன் ஆகியோர் மலர் துாவி மரியாதை செலுத்தினர். பெண்களுக்கு இலவச சேலை,உணவு வழங்கினர்.சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் வடக்கு ஒன்றியசெயலாளர் பூமிநாதன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பூரண சங்கீதா, பொதுக்குழு உறுப்பினர் அம்பலமுத்து, செயற்குழு உறுப்பினர் கணேசன், ஒன்றிய துணைச் செயலாளர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏரியூரில் தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. எஸ்.புதுார் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர் சிங்காரம், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் செல்வகுமார் பங்கேற்றனர்.தேவகோட்டை: தேவகோட்டையில் நகர செயலாளர் பாலமுருகன் தலைமையில் அரசு பஸ் கிளை அலுவலகம் அருகில் கொடியேற்று நிகழ்ச்சி, தியாகிகள் பூங்கா அருகில் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் கவுன்சிலர்கள் இளங்கோ, கருணாநிதி, ஜாகிர் உசேன், இலக்கிய அணி அழகய்யா, செந்தில்குமார், உட்பட பலர் பங்கேற்றனர்.திருப்புத்துார்: திருப்புத்துாரில் நகர் செயலாளர் கார்த்திகேயன், வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் உதயசண்முகம் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்., தெற்கு ஒன்றிய செயலாளர் சண்முகவடிவேல் தலைமையில் அன்னதானம், கண்டவராயன்பட்டி முதியோர் இல்லத்தில் உணவு அளிக்கப்பட்டது. கோட்டையிருப்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு ஒன்றிய செயலாளர் மாணிக்கம் தலைமையில் விராமதி பஸ் நிலையத்தில் அஞ்சலி செலுத்தினர்.திருப்புவனம்: திருப்புவனத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, நகர் செயலாளர் நாகூர்கனி உள்ளிட்ட தி.மு.க.,வினர் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X