பொது செய்தி

தமிழ்நாடு

பேராசிரியருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கல்

Added : ஆக 07, 2021
Share
Advertisement
சிதம்பரம் : சிதம்பரத்தில் கொரோனா பாதித்தவர்கள் உயிர் காக்க 108 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கிய பேராசிரியருக்கு சப் கலெக்டர் மதுபாலன் சான்றிதழ் வழங்கினார்.சிதம்பரம் ஆதிபராசக்தி இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்பவர் அண்ணாமலை பல்கலை கழக பேராசிரியர் ஞானகுமார். இவர் கொரோனா காலக்கட்டத்தில் சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனைக்கு 108 உயிர் காக்கும் ஆக்சிஜன்

சிதம்பரம் : சிதம்பரத்தில் கொரோனா பாதித்தவர்கள் உயிர் காக்க 108 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கிய பேராசிரியருக்கு சப் கலெக்டர் மதுபாலன் சான்றிதழ் வழங்கினார்.

சிதம்பரம் ஆதிபராசக்தி இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்பவர் அண்ணாமலை பல்கலை கழக பேராசிரியர் ஞானகுமார். இவர் கொரோனா காலக்கட்டத்தில் சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனைக்கு 108 உயிர் காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கி சேவை செய்துள்ளார்.இவரின் சேவையை பாராட்டி நேற்று அரசு மருத்துவமனையில் பாராட்டு விழா நடந்தது. தலைமை டாக்டர் அசோக் பாஸ்கர் தலைமை தாங்கினார். சித்தா டாக்டர் அர்ச்சுனன் முன்னிலை வகித்தார். சப் கலெக்டர் மதுபாலன் பங்கேற்று பேராசிரியர் ஞானகுமாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X