சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிரைம் செய்திகள்

Added : ஆக 07, 2021
Share
Advertisement
கணவர் தற்கொலை காட்டுமன்னார்கோவில் அடுத்த சிறுகாட்டூர் புத்துாரைச் சேர்ந்த அமாவாசை, 70; ஆடுகள் வைத்து பராமரிக்கிறார். இவரது மனைவிகள் மேகலா, வாசுகி. நேற்று முன் தினம் ஆடுகளை சரியாக பராமரிக்கவில்லை என கணவர் அமாவாசையை வாசுகி திட்டிவிட்டு, நுாறு நாள் வேலைக்கு சென்றார்.மதியம் கணவருக்கு சாப்பாடு கொடுக்க கொட்டகைக்கு சென்றார். அங்கு முதியவர் வாயில் நுரை தள்ளிய நிலையில்

கணவர் தற்கொலை

காட்டுமன்னார்கோவில் அடுத்த சிறுகாட்டூர் புத்துாரைச் சேர்ந்த அமாவாசை, 70; ஆடுகள் வைத்து பராமரிக்கிறார். இவரது மனைவிகள் மேகலா, வாசுகி. நேற்று முன் தினம் ஆடுகளை சரியாக பராமரிக்கவில்லை என கணவர் அமாவாசையை வாசுகி திட்டிவிட்டு, நுாறு நாள் வேலைக்கு சென்றார்.மதியம் கணவருக்கு சாப்பாடு கொடுக்க கொட்டகைக்கு சென்றார். அங்கு முதியவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார். அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவர் வயலுக்கு அடிக்க வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை குடித்தது தெரிந்தது. தஞ்சை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் மேல்சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

இறந்து கிடந்த முதியவர்

வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் கிராமத்தில், மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், நேற்று காலை 10:00 மணியளவில் உடல் அழுகிய நிலையில், முதியவர் இறந்து கிடந்தார். வேப்பூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார், பிரேதத்தை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

கஞ்சா விற்ற 2 பேர் கைது

காட்டுமன்னார்கோவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் கோபாலகிருஷ்ணன், கருணாகரன் போலீசார் லால்பேட்டை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். எள்ளேரி பஸ் நிறுத்தம் அருகில் கஞ்சா வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த முகமது ஷபியுதீன், 32; தனசிங்கு, 31; ஆகியோரை கைது செய்து ரூ. 6,000 மதிப்புள்ள 120 சிறு பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். பெரியகுளம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற காட்டுமன்னார்கோவில் பேரரசி தெரு ராஜ்குமார், 29; திருமூலஸ்தானம் பன்னீர்செல்வம், 59; ஆகியோரை கைது செய்தனர்.

ரைஸ் மில்லில் திருட்டு

பெண்ணாடம் அடுத்த மாளிகைக்கோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர் விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில் பெரியகொசப்பள்ளம் பஸ் நிறுத்தம் அருகே ரைஸ் மில் வைத்துள்ளார். நேற்று காலை 8:00 மணியளவில், சுப்ரமணியன் மில்லிற்கு வந்து பார்த்த போது, பெட்டியில் வைத்திருந்த ரூ.5,000, சைக்கிள், மில் தளவாட பொருட்கள் திருடு போயிருந்தன. பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் விசாரித்தனர். தடய அறிவியல் நிபுணர் ஸ்ரீதர் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் தசரதராமன் ஆகியோர் தடயங்களை சேகரித்தனர். பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

டிராக்டரில் இருந்து விழுந்தவர் பலி

புதுச்சத்திரம் அடுத்த மணிகொல்லையைச் சேர்ந்தவர் ராஜசேகர், 27; கூலித்தொழிலாளி. இவர் நேற்று இப்பகுதியில் நடந்த மஞ்சள் விளையாட்டு திருவிழாவில் பங்கேற்று, சுவாமி வீதியுலாவிற்கு டிராக்டரில் அமர்ந்து சென்றார். அப்போது தவறி கீழே விழுந்து தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். புதுச்சத்திரம் போலீசார் உடலை கைப்பற்றி, பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X