சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதிக்கு அஞ்சலி அ.தி.மு.க., எதிர்ப்பு

Added : ஆக 07, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி கூட்டுறவு வங்கியில், முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு தி.மு.க.,வினர் அஞ்சலி செலுத்தினர். இதற்கு அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பரபரப்பு நிலவியது.முன்னாள் முதல்வர் கருணாநிதி மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி கூட்டுறவு வங்கி அலுவலகத்திற்குள் இருந்த கருணாநிதி
 கருணாநிதிக்கு அஞ்சலி அ.தி.மு.க., எதிர்ப்பு

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி கூட்டுறவு வங்கியில், முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு தி.மு.க.,வினர் அஞ்சலி செலுத்தினர். இதற்கு அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பரபரப்பு நிலவியது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி கூட்டுறவு வங்கி அலுவலகத்திற்குள் இருந்த கருணாநிதி படத்திற்கு, தி.மு.க., பிரமுகர் அன்பழகன், கட்சியினருடன் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.இதையறிந்த அ.தி.மு.க.,வைச் சேர்ந்த கூட்டுறவு வங்கி தலைவர் பூர்ண ராவ், தன் கட்சியைச் சேர்ந்த வங்கி இயக்குனர்கள் ஆறு பேருடன் வங்கிக்கு வந்தார்.

'கருணாநிதி படத்தை சுவரில் மாட்டிக் கொள்ளலாம். அலுவலகத்திற்குள் நினைவஞ்சலி செலுத்துவது, அரசு விதிகளுக்கு புறம்பானது' என, வங்கி செயலர் மோகன்தாசிடம் கூறி, கருணாநிதி படத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.தகவலறிந்த தி.மு.க., மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலாஜி தலைமையில் அக்கட்சியினர் வந்தனர். பூர்ண ராவ் மற்றும் அ.தி.மு.க.,வினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முடிவில், கருணாநிதி படத்தை பழையபடி சுவரில் மாட்டி சென்றனர். இச்சம்பவத்தால் வங்கி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X